திருப்பதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திருப்பதி
இடம்:  மும்பை
பிறந்த தேதி :  04-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Mar-2015
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  1

என் படைப்புகள்
திருப்பதி செய்திகள்
திருப்பதி - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2015 4:10 pm

சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

சென்னையின் வெள்ளப் பாதிப்பு குறித்து தேசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிடாததை நடிகர் சித்தார்த் சாடியுள்ளார்.


மேலும் படிக்க

மேலும்

வடக்கு வாழுது, தெற்குத் தேயுதுன்னு சும்மாவா சொன்னாங்க. ... 24-Nov-2015 6:44 pm
திருப்பதி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2015 7:05 am

ஆமையின் ஓடும்
களவாடப்படும்.
கரையான் புற்றில்
பாம்பும் உலவாடும்.
***
பட்டாம்பூச்சி
சிறகில் ஓட்டையிட்டு
பாலைநிலமும் கண்
மூடி ரசிக்கப்படும்.
***
கடலுக்கும் எல்லையிட்டு
வலைபோடும் கைகளுக்கு
பரிசாய் விளங்குகள்
போடப்பட்டன.
***
கிளைகள் உடையாத
மரத்தின் வேர்கள் வெட்டப்பட்டன,
வறுமைக்கும் வருவாய் வரி
அரசினால் விதிக்கப்பட்டது.
***
முள்ளிவாய்க்கால் ஓடையில்
முள்ளாடை உடலுக்கு உடையானது.
சிரிய தேசத்தில் தீப்பந்தம்..,
பசிக்காத இரைப்பைக்குள் உணவானது.
***
செல்வன் துப்பும் உமிழும்
ஏழையின் மேல் விழுந்தது
மேகத்தின் மழைத்துளியும்
மோகத்தால் விலையானது.
***
குடிசை வீட்டு பெண்க

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 24-Dec-2015 6:33 pm
சாட்டையடியான வரிகள் நண்பா...! 24-Dec-2015 2:33 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Nov-2015 9:55 am
உணர்ச்சிப்பூர்வமான வரிகள் அருமையான முடிவு 14-Nov-2015 12:27 am
திருப்பதி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2015 3:25 pm

படித்தது

ஆன்மீக சிந்தனைகள்...
* வழிபாடு உண்மையானதாக இருக்க வேண்டும். வெறும் ஜெபமாலையை உருட்டுவதாக இல்லாமல் இதயம் வழிபாட்டில் லயிக்க வேண்டும். எங்கும் நிறைந்திருக்கின்ற பரிபூரணமான கடவுளிடம் முழுமையாக சரணாகதி அடைந்து விட வேண்டும்.

** பாவத்தை வெறுக்கவேண்டுமே ஒழிய, பாவியை வெறுத்தல் கூடாது. இதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. தீய செயல் செய்பவன் திருந்துவதற்கு உதவியாக இருக்கவேண்டும்.

* எத்தனை துன்பங்கள் குறுக்கிட்டாலும் நம் மனம் தீமையைச் சிந்திக்காமல் நல்வழியில் நடப்பதையே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

*பிறர் உதவியை நம்பி இராமல் உங்கள் சொந்த பலத்தையே நம்பியிருக்க வேண்டும். ஆத்மபலம் இல்லாத வேறு எந்த பலமுமே அற்பமானது. பயனற்றது. எண்ணிக்கையில் உயர்ந்திருந்தாலோ, ஆயுதபலத்தில் உயர்ந்திருந்தாலோ அதெல்லாம் உண்மையான பலமாகிவிடாது..

* தவறு செய்தல் மனித இயல்பு என்பர். ஆனால், தவறு என்று கண்டதும் இனிச் செய்வதில்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த உறுதியில் இருந்து விலகாமல் வெற்றி பெற்றுவிட்டால் நாம் முன்பு செய்த தவறுகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் விலகி ஓடி விடும்.

* தவறு செய்து விட்டதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் தோல்வி என்பதே கிடையாது. அவமானமும் கிடையாது. அதுதான் நிஜமான வெற்றி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

*நேர்மையாக இருங்கள். உழைத்து சம்பாதியுங்கள். நியாயமான வழியில் அல்லாமல் பணத்தையோ,
பொருளையோ யாரிடமும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். பெருந்தன்மையையும்,
சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

*இவ்வுலகில் அனுபவிக்கப்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் நாம் செய்யும் முயற்சி அல்ல . நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஆகிய இரு வினைகளுமே ஆகும் .வினையின் பயனை எல்லா உயிர்களும் அனுபவித்தே ஆக வேண்டும் .வினையின் தாக்கத்தை திருவருளால் குறைக்க முடியுமே ஒழிய நீக்க முடியாது .

*எல்லா நேரங்களிலும் கடவுளை நினையுங்கள். குறைந்த பட்சம் காலை, மாலையில் கடவுளை தியானிப்பது மிகவும் நன்மை தருவதாகும்.

Bhavani Boopathy இன் புகைப்படம்.

மேலும்

திருப்பதி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2015 4:12 pm

ஆன்மிகம் படித்தது 

தொகுப்பு 

உங்கள் வீடுகளில் " லக்ஷ்மி கடாக்ஷம் " தழைத்து செல்வம் பெருக

1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.

அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை.

அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.

ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.

அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.

விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.

லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி.

நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.

எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.

நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

4) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்?

பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான்.

கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும்.
‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

11) விளக்கை தானாக மலையேற விடக்கூடாது,
ஊதியும் அமர்த்தக்கூடாது.
புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது.
அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்?
அப்படி கேளுங்க….
தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும்.

12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது.
அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.

13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.

14) ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

16) எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.

20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது.
கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும்.
அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

23) அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.
கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.
கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

24) பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது

26) வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.

27) இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.

29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.

30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.

31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.

32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள்.
வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம்.
பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.

34) ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது.
கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.

36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.
அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.

37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது.
ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.

39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.

42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது

43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.

44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.

45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.

46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.

47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.

48) தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.

49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது

50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.

இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும்.
லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

Sankar Ramadoss இன் புகைப்படம்.
Sankar Ramadoss இன் புகைப்படம்.

மேலும்

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள்.ஏழை பணக்காரர் கொண்டாடும் பண்டிகை, இல்லாதவர்கள் கூட ஏதாவது இனிப்பு வாங்கி ருசி பார்க்கும் பண்டிகை. காலையில் லேகிய மருந்து தருவார்கள்.சாப்பிடும் இனிப்புகள்,எண்ணைப் பலகாரங்கள் ஜீரணிக்க லேகியம் . ஆண்டில் ஒரு நாளாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்ட பண்டிகை.அவரவர் விருப்பம்போல் இனிப்பும்,காரமும்,பட்டாசும்,புத்தாடையுமாகக் கழியும்.. (புதிதாகப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்த பெற்றோரைப் பயமுறுத்தும் பண்டிகை. அந்த நாள் முதல் நாங்கள் அனைத்து தீபாவளி மலர்களை வாங்கி படித்து மகிழும் பண்டிகை. 26-Oct-2015 9:36 pm
தீபாவளியன்று எண்ணெய் தோய்த்துக் குளிப்பது விதிவிலக்கா? 26-Oct-2015 6:07 pm
திருப்பதி - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Sep-2015 12:26 pm

பசுமை விநாயகர் சதுர்த்தி


 எழுத்து தோழர்களுக்கு,

 வணக்கம்!


எழுத்து இயற்கை முறையிலான மாசற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனைத்து தோழமைகளையும் அன்போடு அழைக்கிறது.

சுற்றுசுழல் பாதுகாப்பு, அதில் நல்லதொரு மாற்றம், இவ்விரண்டும் எங்கிருந்து
ஆரம்பிக்க வேண்டும் என்றால், நிச்சயமாய் அது நம் ஒவ்வொருவரின் வீடுகளில்
இருந்து தான் ஆரம்பிக்கவேண்டும்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச் சூழலில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த, நாம் அனைவரும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட இயற்கைக்கு புறம்பான சிலைகளை தவிர்த்து,
இயற்கையான களிமண், காகிதக் கூழ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளையே பயன்படுத்தி பண்டிகையை கொண்டாட உறுதிமொழி ஏற்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.

"எழுத்து தோழமைகள் அனைவருக்கும் எங்களது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்."


விநாயகர் சதுர்த்தி தமிழ் வாழ்த்து அனுப்ப இங்கே சொடுக்கவும்.

அனைத்து வாசகர்களும் தங்கள் பசுமை விநாயகர் சிலை புகைப்படங்களை  நம் எண்ணத்தில் பகிரவும்.

நன்றி

இப்படிக்கு,.
எழுத்து குழுமம்

மேலும்

Dear Admin: Kindly forward Mr.Agan's message to the concerned individual mail id: //eluthu.கம் /view-ennam/25169 regards murali 24-Sep-2015 7:42 am
நன்றி பிரம்மாதி தேவர்களும் ,முனிவர்களும் ,பரமேஸ்வரிய விபூதியாகிய தேவதா பிரஷ்டிகளும் ,காரிய ஆரம்பத்தில் யாதொரு தெய்வத்தை வணங்கிக் காரிய சித்தி அடைகிறார்களோ அந்தத் தெய்வமாகிய முதற் கடவுளும் சகல லோகங்களையும் தன்னுள் அடக்கி ஆளும் கணபதியை வணங்குவோம் 17-Sep-2015 6:38 am
வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள். எழுத்துக் குழுமத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்...!! சுற்று சூழல் கெடாமல் இருக்க நல்லதொரு அறிவுரைகள்...!! அனைவரும் இதனை பின்பற்றினால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பலன்களே...!! 16-Sep-2015 10:00 pm
நல்லதொரு முன்னெடுப்பு. ஆக்கப்பூர்வமான அறிவுரையான உறுதிமொழி வேண்டுதல்.. அருமை.. எழுத்து குழுமத்திற்கு பாராட்டுக்கள். எனக்கு... நம்பிக்கை இல்லாவிட்டாலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன். பசுமையான விநாயகர் சதுர்த்தியாக அமைய வாழ்த்துக்கள். ! இயற்கைக்கு புறம்பான பிளாஸ்டிக் விநாயகரை விட களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் நிச்சயமாக நம் இயற்கை அன்னையை காப்பாற்றுவார். 16-Sep-2015 1:14 pm
திருப்பதி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2015 12:09 am

சிரிப்பு:1
மனைவி:உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்னாடியே ஏன் என்கிட்டே சொல்லலை?

கணவன்:நான்தான் சொன்னேனே,உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு......

சிரிப்பு:2
ஆசிரியர்:என்னிடம் நல்ல படித்தவன் எல்லாம் டாக்டரா இருக்கிறான்.என்னிடம்
மோசமா படிச்சவன் எல்லாம் பஸ் கன்டக்டராத் தான் இருக்கான்.

மாணவன்:அப்போ உங்களட்டை படிச்ச எல்லாரும் டிக்கட் கொடுக்கிற வேலை
தான் பாக்கிறாங்கள் என்ன டீச்சர்.....

மேலும்

வருகையாலும் கருத்தாலும் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி 02-May-2015 10:56 am
வருகையாலும் கருத்தாலும் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி 02-May-2015 10:56 am
ஹா ஹா... சூப்பர் காமெடி... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 02-May-2015 3:38 am
சூப்பர் 02-May-2015 12:31 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Apr-2015 5:29 pm

மனிதன்
------------
கருவில் சதையாகி
தெருவில் ஊர்போயி
கல்லறையில் தூங்கும் மண்புழு

பயணம்
------------
1.கருவில் தவழ்ந்து
மண்ணில் நடந்து
மண்ணறையில் தூங்கும் வரை.....,

2.கருவிலிருந்து உலகிலும்
உலகிலிருந்து கல்லறைக்குமான
நடை பாதை.

சிகரெட்
-----------
தனக்குத்தானே
ஊதி ரசிக்கும் சாவுமணி
சிகரெட் புகை.

இணையம்
-----------------
தீயதை நல்லதாய்க்
காட்டும் கண்களின்
மாயாஜால வித்தை.

கவிஞன்
---------------
சாலையில் கிடக்கும்
கல்லைக்கூட வரியாக்கி
புகழாக்குபவன்.

கோபம்
-----------
வானமே ஏன்?
மூக்கு சுண்டுகிறாய்
சிவக்குது மேகங்கள்.

நிலை
---------
அந்தி ச

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 20-Aug-2015 6:07 am
கவிஞன் சாலையில் கிடக்கும் கல்லைக்கூட வரியாக்கி புகழாக்குபவன். நல்ல படைப்பு ஸர்பான் 20-Aug-2015 12:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 13-May-2015 8:48 pm
பிஸ்கட்டை விட பழைய சோறு தான் நண்பா அருமையாக இருக்கும்..... கவி மிகவும் அருமை..... 13-May-2015 6:59 pm
திருப்பதி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2015 11:34 pm

உண்மை மலிந்து பொய்கள் வியாபாரம்
செய்யப்படும் இலாபச்சந்தை அகிலம்.
வறுமைப்பட்ட கற்புக்கரசி
தன் உடலை விலை பேசுகிறாள்.
மானம் காத்த பருத்தித்துணி
நாகரிகம் பறிக்கும் ஆயுதம்.

கல்லூரி வாசல்கள் விபாச்சாரத்திற்கு
ஒத்திகை பார்க்கும் அரங்கேற்றம்.
திறமை சாளிக்கும் சமுதாயம்
கொடுக்கும் பட்டம் தூக்கு கயிறு
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தாய்ப்பாலெனும் பந்தமில்லை.

பிச்சைக்காரனுக்கு சில்லறை போடாமல்
அவன் பிச்சையை துடிதுடிக்க
அபகரிக்கும் காலம்.கால எல்லை
நிர்ணயிக்கப்பட்ட கல்யாண அநாகரிகம்
எழுதப்பட்டு நிறைவேற்றப்படாத அரசியல்
யாப்பு, மாறுமோ? உலகத்தின் நிலை

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 21-May-2015 1:40 pm
உண்மை நிலை அருமையான படைப்பு 21-May-2015 9:28 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 25-Apr-2015 11:53 pm
வலிகள் அனலாய் பறக்கும் அசத்தலானப் படைப்பு ...........வாழ்த்துகள் தொடருங்கள் ............. 25-Apr-2015 2:55 pm
திருப்பதி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2015 4:45 am

மனம்
விசித்திரமானதுதான்
விலக விலகத்தான்
ஆசைப்படுகிறது..

மரணத்தின் சுவாசத்திலும்
ஏனோ மயங்குகிறது
எதையோ கேட்கிறது
எதற்காகவோ ஆசைப்படுகிறது..

இறுதி யாத்திரையின்
முடிவான அசைவிலும்
அந்தக் கண்கள்
கனவைச் சுமக்கின்றனவே…

ஏன் தெரியுமா?
"மனிதன் தேடுகிறான்!"

மேலும்

தம்பி.. எழுதியவர் யாரென்று குறிப்பிடவில்லை.நன்று. இந்த எளிய கவிதை நான் எழுதியது. 1987 ல் எழுதி 1991ல் எனது சிகரங்களை நோக்கிய சிறகடிப்புகள் " முதல் நூலில் வெளியானது. வேறு எங்கு பதிவிட்டேன் என்று நினைவில்லை. நீங்கள் எங்கு கண்டீர்கள்? இந்த பதிவை கண்டதும் மகிழ்ச்சி. .. 21-Mar-2015 3:42 pm
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்... திரைப்பட பாடல் வரி.. நன்று சகா 21-Mar-2015 12:26 pm
நல்ல எழுதி உள்ளீர் தொடருங்கள் வாழ்த்துக்கள் 21-Mar-2015 10:45 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே