ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

மனிதன்
------------
கருவில் சதையாகி
தெருவில் ஊர்போயி
கல்லறையில் தூங்கும் மண்புழு

பயணம்
------------
1.கருவில் தவழ்ந்து
மண்ணில் நடந்து
மண்ணறையில் தூங்கும் வரை.....,

2.கருவிலிருந்து உலகிலும்
உலகிலிருந்து கல்லறைக்குமான
நடை பாதை.

சிகரெட்
-----------
தனக்குத்தானே
ஊதி ரசிக்கும் சாவுமணி
சிகரெட் புகை.

இணையம்
-----------------
தீயதை நல்லதாய்க்
காட்டும் கண்களின்
மாயாஜால வித்தை.

கவிஞன்
---------------
சாலையில் கிடக்கும்
கல்லைக்கூட வரியாக்கி
புகழாக்குபவன்.

கோபம்
-----------
வானமே ஏன்?
மூக்கு சுண்டுகிறாய்
சிவக்குது மேகங்கள்.

நிலை
---------
அந்தி சாய்ந்தால் நிலா
வரும்.பந்தி களைந்தால்
சேரிச்சிறுமி வருவாள்.

தாய்
-------
1.முளையூட்டி தோள்
சுமந்து வளர்த்தெடுத்த
கண்கண்ட தெய்வம்.

2.தாலாட்டுப்பாட்டால்
வாழ்க்கையில் பாசம்
கற்றுத்தந்த முதல் ஆசான்.

3.கோயில் கட்டி
பூஜை செய்யப்படாத
கடவுள்.

கைக்குட்டை
-------------------
செல்வன் வியர்வை
துடைப்பதற்காக தயாரிக்கப்பட்ட
கைக்குட்டை ஏழை...,

செல்பேசி
--------------
பிறந்த திகதியும்
இறந்த திகதியும் வேற்றான்
அறியும் முதல் உத்தி.

அவலம்
-------------
மந்திரி வீட்டு நாய்க்கு
லண்டன் பிஸ்கட்டு
ஏழைக்கு பழைய சோறு.

ஊனம்
----------
கடவுளால் எழுதப்பட்ட
விதிப்புத்தகத்தில் விடப்பட்ட
எழுத்துப்பிழை.

கானகம்
------------
அமைதிக்காக ஐந்தறிவு
புத்தி ஜீவிகள் அமைத்துக்
கொண்ட வாசல்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (26-Apr-15, 5:29 pm)
பார்வை : 330

மேலே