ஹைக்கூ
அதிவேகப் பயணம்
கவனிக்கவில்லை
எமனின் வருகை...
********
புல்லிற்கும் பனித்துளிக்குமான
காதலை பிரித்தது
சூரியன்.
******
எட்டா வானம்
எட்டும் உயரத்தில் தெரிகிறது
மலை உச்சியில்...
*******
நிலவை ஒளித்து
கண்ணாமூச்சிகாட்டுகிறது
மேகம்....
ரேவதி.......