நிலை -கவிஞர் முஹம்மத் ஸர்பான்

உண்மை மலிந்து பொய்கள் வியாபாரம்
செய்யப்படும் இலாபச்சந்தை அகிலம்.
வறுமைப்பட்ட கற்புக்கரசி
தன் உடலை விலை பேசுகிறாள்.
மானம் காத்த பருத்தித்துணி
நாகரிகம் பறிக்கும் ஆயுதம்.

கல்லூரி வாசல்கள் விபாச்சாரத்திற்கு
ஒத்திகை பார்க்கும் அரங்கேற்றம்.
திறமை சாளிக்கும் சமுதாயம்
கொடுக்கும் பட்டம் தூக்கு கயிறு
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தாய்ப்பாலெனும் பந்தமில்லை.

பிச்சைக்காரனுக்கு சில்லறை போடாமல்
அவன் பிச்சையை துடிதுடிக்க
அபகரிக்கும் காலம்.கால எல்லை
நிர்ணயிக்கப்பட்ட கல்யாண அநாகரிகம்
எழுதப்பட்டு நிறைவேற்றப்படாத அரசியல்
யாப்பு, மாறுமோ? உலகத்தின் நிலை

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (20-Apr-15, 11:34 pm)
பார்வை : 149

மேலே