கண்மணி - சுயவிவரம்
(Profile)
 
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : கண்மணி | 
| இடம் | : யாது ஊரே யாவரும் கேளிர் | 
| பிறந்த தேதி | : 04-Mar-1991 | 
| பாலினம் | : | 
| சேர்ந்த நாள் | : 21-Apr-2013 | 
| பார்த்தவர்கள் | : 4422 | 
| புள்ளி | : 292 | 
யோனியில் புனிதத்தை தைத்து
கொங்கையில் மானத்தை மறைத்து
நேசத்தை நிர்வாணமாக்கி 
உயிரை வெறியாடும் பங்காளிகளே !
வேண்டாம் உங்கள் கரிசனம்
கண்ணாடி குவளையில் வாழும் 
நிர்வாண மீனுக்கு கிடைக்கும் 
சுதந்திரத்தோடு 
புது விடியலுக்காக போராடும் 
பல பெண்களில் நானும் ஒருவளே!
தவழும் பூங்கொத்தை  
தொட்டிலில் சாய்த்து 
ஆராரோ பாடி 
மயில் இறகால் வீசி விட 
கணம் கூட இமைக்காமல் 
எனையே அவள் பார்க்க 
இன்றும் சிவராத்திரி என 
நான் தூங்க சென்றேன்...
டிசம்பரில் பிறந்த மாயமே !
எங்களின் குலம் மீது 
பொல்லாத காதல் கொண்டு 
எல்லோரையும் அணைத்து 
மூச்சிரைக்க செய்தாயே 
யார் நீ?
தரணியே உன்னை வெறுத்தாலும்  
நிறத்தை மறந்து 
பாமரன் பணக்காரன் பாகுபாட்டை உடைத்து 
ஓவ்வொரு உயிரையும் தீண்டி 
சொர்கம் காட்டிய சாபமே 
நீ வேண்டாமென 
தனிமையை அனுபவித்தேன் 
இரண்டடி இடைவேளை கடைபிடித்தேன் 
தினம் பன்னிரண்டு முறை 
எனை நான் சுத்தம் செய்தேன் 
விஞ்ஞானமும் ஆன்மிகமும் 
நின் மும் தோற்று
வெற்றியை ருசித்த பின்பும் 
ஏன் செல்ல மறுக்கிறாய் 
கண்ணீர் வற்ற  கெஞ்சுகிறேன் 
இப்பூமி உனக்கு ஏற்றதல்ல 
மனிதர்களை மன்னித்து போ
என் கொரோனா காதலியே ....
நீ எங்கே என தேடினேன் 
காதல் தீயில் எரிகிறேன்   
உன்னால் உறவை இழந்து     
என் உணர்வையும் கொன்றேன்   
காதலை ஏனடி மறைக்கிறாய் 
என்னை காண ஏன் மறுக்கிறாய்
கண்களால் உயிரை சீண்டி
மௌனத்தால் வென்றவளே
நிழலென தொடர்ந்தவனை
ஏனடி வெறுக்கிறாய்? 
ஏனென்று கேட்டவனை
கேள்விக்குறியாக்கி வீதியில் நிற்க செய்தாய்  
ஒவ்வொரு நொடியும் உன்னால் இறக்கிறேன் 
மீண்டும் உன் நினைவினால் உயிர்த் தெழுகிறேன்
எனது சிறகை உடைத்து
தனிமை சிறையில் அடைத்து
வாழ்வில் இருளை தந்து  
தீவில் வாழ செய்த பெண்ணே 
நம்முள் நடக்கும் நாடகம் கண்டு 
மனம் ஒருபுறம் சிரிக்க 
மறுபுறம் உன்னை வெறுக்குதே 
நேசத்தை மறந்து 
துன்பத்
தேர்வில் வெற்றி அடைந்தவர்கள் வாழப் பிறந்தர்வர்கள்  
தோல்வி அடைந்தவர்கள் ஆள பிறந்தர்வர்கள்
காதலை சொல்லி தோற்றால் கூட 
நீயே....அவளின் முதல் காதலன்
எட்டு வயது சிறுமி அவள்
மான் போல் துள்ளிக் குதித்தவள் 
உலகில் உள்ள அனைவருமே அவளுக்கு அன்பானவர்கள்
 
தீமை என்னும் சொல்லக்கூட அறியாதவளுக்கு 
தெய்வங்கள் சாட்சியாய் நடந்தது அந்த வெறியாட்டம் 
இந்நாட்டில் பெண்களை கடவுள் என்பர் 
பெண்களை தேவியாய் கோவில்களில் தினமும் பூஜிப்பர்
அப்படிப்பட்ட இடத்தில் காமத்திற்க்காக தன் உயிரை நீத்தல் அக்குழந்தை 
அங்கே கூடி இருந்த தெய்வங்களை (கற்சிலைகளை) கேட்கிறேன்
அந்த கொரூரம் நடந்த போது  
உங்கள் விழிகளில் ஓளி இழந்துவிட்டதா
கைகள் என்ன கட்டப்பட்டு இருந்ததா 
அந்த உயிரின் கீச்சல் தான் செவியில் விழவில்லையா
இல்லை அஷிஃபாவும் ஆயிரத்தில் ஒன்று என மனம் மரத்துவிட்ட
ஒரு முறை திரும்பியோ மெய் சுடரே
ஒரு முறை பேசாயோ ஆம்பல் துளிரே  
நீலவானில் முகில் ஒன்றாய் கூடி
கடிகாரம் பாராமல் மழை தூவ
குடையின்றி இருவரும் சேர்ந்து
மலராய் நனைவோம் வா
அவ் மண் வாசம்
பிறந்த குழந்தையின் பாதம்  
தேகம் தொட்டு 
இதழ்களை இணைப்போம் வா
மஞ்சத்தில் ரோஜா போல் நீ கிடைக்க
தலையணை பூக்கள்  உன்னை சொரிய
இமை போல் உன்னை காப்பேன்
தென்றல் தீண்ட அனுமதி மறுப்பேன்  
மையிட்ட கண்கள்
மயில் இறகாய் இதயத்தை வருட
கனா உலகில் உன்னுடன் இருக்க 
நிஜம் தேவையில்லை
அந்த பொய் போதுமே
நான் வாழ
அடி தோழி
என் உயிரின் நாடி
பல ஜென்மம் வேண்டி
உன்னைக் கண்டேன்
குருதியில் இருக்கும் அணுக்களைப் போல்   
எண்ணற்ற சிப்களால் நெய்யபெற்றது உன் இதயம்
 
தொட்டாசினுங்கியைப் போன்ற தேகம் பெற்று 
உன் நாணத்தின் தன்மையை வெளிப்படுத்தினாய்  
சிறு விதையாய் பிறந்த நீ; இன்று 
மக்களின் சிந்தையை
உன் ஏழாம் அறிவாள் ஆட்கொண்டாய் 
 
மந்திரம் இல்லா தந்திரப் பொருளான நீ
மனிதனின் வாழ்வில் அங்கமானாய்
அம்பாறித் தேரில் உலா வரும் கண்ணன் முதல்
பால் வாசம் மறக்கா குழந்தை வரை விரிவடைந்தாய்
 
உன் பெருமையை அறியாமல் வாங்கியோர் பலர் 
அதில் உன் பயனை அடைந்தோர் சிலரே
 
தாய்யற்ற பிள்ளையாய் இவ்வுலகில் ஜனித்த உன்னை
தத்தெடுத்த வள்ளலில் நானும் ஒருவன் 
மண்ணுலகம் தொடங்கி விண்ணுலகை
நண்பர்கள் (55)
 
                                                    Deepan
சென்னை
 
                                                    வீரா
சேலம்
 
                                                    வாசு
தமிழ்நாடு
 
                                                    ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி
 
                                                     
                     
 
					 
 
					 
                                                     
                                                     
                                                     
                                                     
                             
                            