கைபேசி
குருதியில் இருக்கும் அணுக்களைப் போல்
எண்ணற்ற சிப்களால் நெய்யபெற்றது உன் இதயம்
தொட்டாசினுங்கியைப் போன்ற தேகம் பெற்று
உன் நாணத்தின் தன்மையை வெளிப்படுத்தினாய்
சிறு விதையாய் பிறந்த நீ; இன்று
மக்களின் சிந்தையை
உன் ஏழாம் அறிவாள் ஆட்கொண்டாய்
மந்திரம் இல்லா தந்திரப் பொருளான நீ
மனிதனின் வாழ்வில் அங்கமானாய்
அம்பாறித் தேரில் உலா வரும் கண்ணன் முதல்
பால் வாசம் மறக்கா குழந்தை வரை விரிவடைந்தாய்
உன் பெருமையை அறியாமல் வாங்கியோர் பலர்
அதில் உன் பயனை அடைந்தோர் சிலரே
தாய்யற்ற பிள்ளையாய் இவ்வுலகில் ஜனித்த உன்னை
தத்தெடுத்த வள்ளலில் நானும் ஒருவன்
மண்ணுலகம் தொடங்கி விண்ணுலகை கையளவில் கொண்டவன் நீ
தனிமையின் இருளை போக்க ஆதவனாய் வந்து
விடையற்ற கேள்விக்கு பொருள் தந்தது
முடிவற்ற பாதைக்கு முடிவுரைத்தவன் நீ
நீ பிறக்கா காலத்தில் வாழந்த என் தந்தையும் தாயும்
காதலை கடிதத்தில் தீட்டி மகிழ்ந்தாராம்
உன் அருள் இல்லையென்றால்
என் தேவதையை கண்டே இருக்கமாட்டேன்
அவளின் கீதம் கேட்டு தினமும் துயில் பெற்றிருக்கமாட்டேன்
உன் அறிவின் ருசி கண்டு
உன் வேகத்தின் அருமை கண்டு
இக்கலியுகத்தில் உன்னை போற்றும் சிலரில்
நானும் ஒருவன் கைபேசி நண்பனே