கொரோனா காதலிக்கு
டிசம்பரில் பிறந்த மாயமே !
எங்களின் குலம் மீது
பொல்லாத காதல் கொண்டு
எல்லோரையும் அணைத்து
மூச்சிரைக்க செய்தாயே
யார் நீ?
தரணியே உன்னை வெறுத்தாலும்
நிறத்தை மறந்து
பாமரன் பணக்காரன் பாகுபாட்டை உடைத்து
ஓவ்வொரு உயிரையும் தீண்டி
சொர்கம் காட்டிய சாபமே
நீ வேண்டாமென
தனிமையை அனுபவித்தேன்
இரண்டடி இடைவேளை கடைபிடித்தேன்
தினம் பன்னிரண்டு முறை
எனை நான் சுத்தம் செய்தேன்
விஞ்ஞானமும் ஆன்மிகமும்
நின் மும் தோற்று
வெற்றியை ருசித்த பின்பும்
ஏன் செல்ல மறுக்கிறாய்
கண்ணீர் வற்ற கெஞ்சுகிறேன்
இப்பூமி உனக்கு ஏற்றதல்ல
மனிதர்களை மன்னித்து போ
என் கொரோனா காதலியே ....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
