உன் நினைவுகளும் வலிகளும் போதும் 555

என்னுயிரே...


நம் காதல்
கதிரவனை
போல் என்கிறாய்...


காலையில் உதித்து
மாலையில் மறைந்தாலும்...

மீண்டும்
மறுநாள்
உதயமாகும்...

இன்று சேராத நம் காதல்
மறுஜென்மத்தில் சேரலாம் என்கிறாயடி...

காற்றில் களைந்து செல்லும்
கார்மேகம் இல்லையடி...

என் காதல்
நிரந்தர நீலவானம்...

இன்று நீ கொடுத்த
வலிகளை...

நான் மறு ஜென்மத்திலும்
தொடர வேண்டுமா...

எவ்வளவு
ஆசையடி உனக்கு...


நீ கொடுத்த
வலிகளும் போதும்...

உன் நினைவுகளும்
போதும் எனக்கு...

என் ஆசையெல்லாம்...

கார்மேகம் போல
களைந்து செல்ல வேண்டும்...


உன் நினைவுகள் எல்லாம்
என்னைவிட்டு நிரந்தரமாக.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (5-Jul-20, 8:21 pm)
பார்வை : 684

மேலே