முழுமையாக மறந்தாய் என்னை 555

என்னுயிரே...
தினம் அதிகாலை நேரம்
கடற்கரை ஓரம்...
ஓர் நடைபயணம் நீயும்
வருவாய் என்னெதிரே தினம்...
காலை கதிரவன்
மெல்ல உதயமாக...
உன் கரம் பிடித்து
சொன்னேன்
என் காதலை...
என் காதலை...
இரு கரங்களால் என்கரம்
பிடித்து சொன்னாய் சம்மதம்...
கதிரவனின்
பிரகாசம் போல்...
நம் காதலும்
பிரகாசமாய் வளர...
மாலை கதிரவன் மலையடிவாரத்தில்
மறையும் என்பதை மறந்தேன்...
கல்லான உன்
நெஞ்சம் கொண்டு...
நம் காதலை
மறந்தாய்
மறந்தாய்
முழுமையாக...
மீண்டும் உதிக்கும்
கதிரவன் போல்...
நீயும் உதயமானாய்
என் முன்னே...
வேறொருவரின்
மனைவியாக...
உனக்காக காத்திருந்த
நான்
நான்
உன்முன்னே கண்ணீரில்...
நீயோ என் முன்
புன்னகையில்.....