தீர்ப்புகளை வழங்கிவிடு
தீர்ப்புகளை வழங்கிவிடு.
29 / 09 / 2024
நீதி தேவதையே...
உன் கண்களை கட்டிவிட்டது யார்?
உன் கைகளில் ஏந்தி நிற்கும்
தராசு யார் பக்கமும் சாயாமல்
தாங்கிப் பிடிப்பது யார்?
கருப்புத் துணியால்தான் உன்கண்கள்
கட்டப் பட்டிருக்கிறது.
கருப்புக்கு நிற பேதமில்லை. அத்தனை
நிறங்களும் அதற்குள் அடக்கம்.
குற்றம் சாட்டி கூண்டிலிருப்பவர்
ஏழையா? செல்வந்தனா?
படித்தவானா? பாமரனா?
பதவியில் இருப்பவனா? பரதேசியா?
அரசனா?ஆண்டியா?
எந்த ஒரு தகுதியும்
உன் தீர்ப்பை மாற்றிவிடக்
கூடாதென்றுதான் உன் கண்கள்
கட்டப் பட்டிருக்கிறதோ? என்னவோ?
அய்யகோ..
கண் கட்டியிருக்கும் தைரியத்தில்
நடைமுறையில் இன்று .அரங்கேறும்..
அவலங்கள் சொல்லி மாளாது.
எழுதிட ஏட்டில் அடங்காது.
காசுக்காக உன் தராசு
தடுமாறுவது தலைமுறையின் விதி.
ஒருபக்கம் சாய்வது யார்செய்த சதி?
நிரபராதி தண்டிக்கப் பட்டால்
நிர்மூலம் ஆகிடாதோ ஏழையின் கதி.
நீதி தேவதையே..
இதுவரை உன்கண்கள் கட்டியிருந்தது போதும்.
கண் கட்டை அவிழ்த்துவிட்டு iru
கண்களால் எல்லாவற்றையும் பார்.
நல்லவேளை காதையும் வாயையும்
விட்டு விட்டார்கள்.
காதை தீட்டி நன்றாக கேள்.
அறிவையும் அனுபவத்தையும்
அலசி ஆராய்ந்து
மனசாட்சிக்குத் துரோகம்செய்யாமல்
நீதியை நிலைநாட்டி
வாய்விட்டு நேர்மையாய்
தீர்ப்புகளை வழங்கிவிடு.
காசுக்காக விலை போய் விடாதே.
போகும்போது எதைக் கொண்டுபோகப் போகிறாய்?.
உனக்குத் தெரியாத சட்ட திட்டங்களா?
உனக்குத் தெரியாத நியாய தர்மங்களா?
நீதிக்கு முன் எல்லோரும் சமம்.
நீதியை நிலை நாட்டு.
சமமாக எல்லோருக்கும் பங்கிடு.