கையில காசு வாயில தோசை

கையில காசு வாயில தோசை...!
24 / 09 / 2024

கையில காசு வாயில தோசை
என்று உலகம் சுற்றுதடா தம்பி
வாய் எல்லாம் பொய். வளர்ந்த
மெய் எல்லாம் நடிப்பு என்றுதான்
வாழ்க்கைச் சக்கரம் சுழலுதடா தம்பி
உனக்கொன்று சொல்லிட துணிகிறேன்
கண்களை அகலத் திறந்து வையடா
செவிகளை பெரியதாக்கி கூர்மை ஆக்கிடடா
கைகளை இரும்பாக்கி வலுவாக்கிடடா
எதையும் தாங்கிட இதயத்தை பழக்கிடடா
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
சவால்கள் பாதையை அடைத்து நிற்குதடா
சிறு மலை ஏறினால் தொடர்ந்திடும்
தலை சுற்றும் கிடுகிடு பள்ளத்தாக்கு
பள்ளத்தில் நின்றாலோ வான்முட்ட
உயர்ந்து நிற்கும் மலை முகடுகள்
ஒரு மரத்தில் ஏறினால் மேலே
தலை கீழாய் தொங்கும் மலைப்பாம்பு
கீழே சீறி நிற்கும் புலிக்கூட்டம்
வாய்திறந்து விழுங்கிட முதலையாய்
காலைச் சுற்றும் களவாணி சுற்றங்கள்
அசந்தால் அடித்து போட்டு விட
அவசரமாய் அலையும் சகமனித கூட்டம்
இத்தனையும் தாண்டி சமாளித்துதான்
உன் இலக்கை எட்ட வேண்டும்.
தேடு ..தேடுதல் இல்லையென்றால்
வாழ்க்கை ரசனை இன்றி போய்விடும்.
போராடு..போராட்டம் இல்லையென்றால்
வெற்றி சுவை குன்றிப் போய்விடும்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (25-Jul-25, 9:18 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 30

சிறந்த கவிதைகள்

மேலே