Rajagopalan Kumar - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : Rajagopalan Kumar |
| இடம் | : Chennai |
| பிறந்த தேதி | : 19-Sep-1959 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 10-May-2014 |
| பார்த்தவர்கள் | : 306 |
| புள்ளி | : 74 |
Basically I am a technical person ; Electronic Engineer ; Interested in தமிழ் and English Poems .
நித்தமும் மலை முகட்டில் அந்தி சாயும் பொழுதில்
சுடர் மிகு கதிரவன் கார்த்திகை தீபமாய் ஒளிர்ந்திட
செம்பொன் கதிர் மழையில் கல் மலை சுடர் மலையாய்
அண்ணாமலையாய் வானளாவ ஓங்கி ஒளிர்ந்திட
நிலமடந்தை வையத்து வாசலிலே நிலவொளி ஏற்றினாள்
வையத்து கூரையெல்லாம் மின்மினி விளக்கேற்றினாள்
அண்ணாமலையார் நினைவில் ரசிக்கும் காட்சி
பகலும் இரவும் சேர்ந்த அந்தி பொழுதெல்லாம்
அர்தநாரீசன் தரிசனம் அனுதின காட்சியாக
நித்தம் நித்தம் கார்த்திகை தீபத் திருநாளே .
காலத்தால் மூத்த தமிழ் என்னும் சொற்கற்பக தருவில்
பழுத்த பல் சுவை கனிகளாம் பாக்களும் பல்கலை நூல்களும்
குன்றுபோல் பரந்து விரிந்த மா மரம் எரிய பாலகன்
காலத்தே நடை போடும் புலவர் கைகளில் உதிர்த்தவை
காலத்தால் சுவை குன்றாத , தமிழ் சுவை சுட்டதோ என்றான்
பாரெல்லாம் பரவிய பொதுமறை தமிழன் குறள்
காலத்தால் ஆறாத என்றும் சுடும் பழம் அல்லவோ
தமிழ் களஞ்சிய மதுரையே பழம் உதிர் சோலையன்றோ
முத்தான ழ கரம் முத்தமிழுக்கு விழி அழகு
சந்தமிகு சித்தர் பாக்கள் தமிழுக்கு நடை அழகு
சிலேடை கவிதைகள் செந்தமிழுக்கு வாய் அழகு
உலக மறையாம் திருக்குறள் தமிழுக்கு அறிவழகு
முத்தமிழுக்கு முதல்வனாம் முருகனே அழகு
நீ வளர்ந்த தூங்கா மா நகராம் மதுரை அழகு
இளமை குன்றா மூத்த தமிழ் செம்மொழி தாயே
யான் உனக்கு மகன் ஆக பிறக்க என்ன தவம் செய்தேனோ
விஞ்ஞான உலகிலே
விலையில்லா பொருளில்லை !
நடமாடும் மனிதனுக்கு
நல்லெண்ணம் சிறிதும் இல்லை !
பணத்துமேலே மோகம் கொண்டு
பந்த பாசத்தினை பழிக்கின்றான் !
பிறர் சொல்லும் வார்த்தை கேட்டு
திசை மாறி செல்கிறான் !
சொகுசான வாழ்க்கை வாழ
தன் சொர்க்கத்தை இழக்கின்றான் !
உதவாத பணத்தை சேர்க்க
உலகெல்லாம் அலைகின்றான் !
இயற்கை அவனிடம் ...
அலைந்தது போதும் !
மனிதனே சற்று நில் !
கடலின் அலையோசை கேள்
அளவில்லா இன்பம் தரும் !
காலை எழும் சூரியனைப் பார்
உன்னை புதிதாய் உயிர்த்து விடும் !
சுற்றி திரியும் பறவையை பார்
உனக்கு பாசத்தை சொல்லி தரும் !
விலையில்லா காற்றின் மொழியை கேள்
உன் செவிக்கு இசை விருந்து
கல்லிலே கடைந்த கலைவண்ணம் காண்பார்
மாதவன் மைத்துனன் மால் வண்ண கடலோரம்
கால காலனை குறித்து காலம் கடந்த மா தவக்கோலம்
மாயவன் நடாத்திய மறக்கள நாடக காட்சிகள்
மலையன்ன மாதங்கங்கள் வீர மா மல்லர் பூரி போரும்
மாமல்லபுர தேரோடும் காட்சிகள் அற்புத காட்சிகளே
மாபெரும் நாடகம் நடத்திய களை ப்பாலோ
கடலோர கோவிலில் மாதவன் கிடந்தது சயனம் கொண்டானோ !
தென் தமிழ் நாடெனும் போதினிலே
பொதிகை தெம்மாங்கு தமிழ் வந்து பாயுது காதினிலே
முக்கூடல் சங்கமத்தில் மலரும் செங்கமல ஆதவன் ,
பொன்மணி நீரலைகள் சுந்தர காட்சிகள் பாயுது கண்களிலே
பொதிகை மலை மூலி மணம் தவழ்ந்து வந்து பாயுது நாசியிலே
குமரிக் கடல் காற்றும் பசுமலை தென்றலும் மோதுது மேனியிலே
முத்தமிழ் கூடும் சங்கத்தில் மலர்ந்த தமிழ் பொற்கமலம்
கடந்த கால நினைவலைகள் வந்து பாயுது சிந்தையிலே
பொறி ஐந்தும் பூரித்திட , புவியில் ஓர் தனி நாடு
உளியின் ஒலியில் கல்லிலே கண்ணொளி திறந்திடும்
தென் பரத கலை திரு நாடே , என் தாய் தமிழ் திரு நாடே
உன் மடியில் யான் தவழ என்ன த
நீல வான் பலகையில் பரவிய மேகச் சித்திரங்கள் காண்
பச்சை புல் தரையில் பரவிய வண்ண மலர் சித்திரங்கள் காண்
பசுன்சோலை மரங்களில் சிறகடிக்கும் சிட்டு சித்திரங்கள் காண்
வானளாவிய மலைகளில் பல் அடுக்கு கற்சித்திரங்கள் காண்
சுட்டெரிக்கும் பாலைவன மணற் குன்றுகள் கோல சித்திரங்கள் காண்
ஓடும் நதிகளிலே சுழித்து சுழித்து நீர்திவலை சித்திரங்கள் காண்
கரை காணா கடலில் ஆர்த்தெழுந்து அடங்கும் அலை சித்திரங்கள் காண்
பாரெல்லாம் பரவிய இயற் சித்திர சபையிலே சித்திர சபேசன் கைவண்ணம் கண்டேனே !
காலத்தின் கோலமாய் தமிழ் ஆண்டு வடிவான பால குகனே
ஆண்டின் ஆறிரு மாதந்தோரும் இனிது வாழ வேண்டும்
ஆறு முகமான அறுவகை காலந்தோரும் இனிது வாழ வேண்டும்
செய் தொழிலே வேலாய் காத்திட இனிது வாழ வேண்டும்
ஏறி அமர்ந்த கர்மத்தில் ஜெயகொடியுடன் வாழ வேண்டும்
அறம் செரிந்த அறிவார்ந்த ஆசைகள் துணை செய் இனிது வாழ வேண்டும்
காலத்தின் அடியவராம் அனைத்துலக மாந்தரும் இனிது வாழ வேண்டும்
புத்தாண்டாய் பிறந்திட்ட ஆறுமுக பாலகனே நின் கழல் வேண்டும் .
காலத்தின் கோலமாய் தமிழ் ஆண்டு வடிவான பால குகனே
ஆண்டின் ஆறிரு மாதந்தோரும் இனிது வாழ வேண்டும்
ஆறு முகமான அறுவகை காலந்தோரும் இனிது வாழ வேண்டும்
செய் தொழிலே வேலாய் காத்திட இனிது வாழ வேண்டும்
ஏறி அமர்ந்த கர்மத்தில் ஜெயகொடியுடன் வாழ வேண்டும்
அறம் செரிந்த அறிவார்ந்த ஆசைகள் துணை செய் இனிது வாழ வேண்டும்
காலத்தின் அடியவராம் அனைத்துலக மாந்தரும் இனிது வாழ வேண்டும்
புத்தாண்டாய் பிறந்திட்ட ஆறுமுக பாலகனே நின் கழல் வேண்டும் .
சந்தங்கள் சதிராடும் செந்தமிழ் அரங்கினிலே
சொல்லும் பொருளும் இசைந்தாடும் தமிழ் கவிதையிலே
ரகசியங்கள் பொதிந்த சித்தர் தமிழ்ப் பாக்களிலே
ஆனந்த தமிழரசர் ஆடும் பொன்னம்பலம் கண்டேனே !
புனலோரம் சூழ்ந்து நின்று புன்சிரிக்கும் வண்ணப்பூக்கள்
கோரைப் புற்களுடன் இரவுத்தென்றலில் சாய்ந்தாடும்
பளிங்கு புனல் நடுவே பூரண நிலவு கண்ணன் முகம் காட்டும்
மரங்களில் இளந்தென்றல் ஊதும் குழல் கேட்கும்
இலைகள் சரி நிகர் சந்தம் கோலாட்ட முரசொலிக்கும்
உற்று நோக்கின் , கண்ணனை சுற்றி கோபியர் ராசலீலை காண் !
அண்ணாந்து நோக்கின் , கார்நீல மேனியில் பௌர்ணமி முகம்
சுற்றி கோலமிடும் மின்மினி கோபியருடன் ராசலீலை காண் !
இரண்டும் இரண்டும் நான்கு..
நான்கில் ஒன்று போனால் மூன்று
என்பது தொடங்கி
அறிவியலும் பூகோளமும்
சரித்திரமும்,
கண்ணைக் கட்டும் கணிதங்களும்
எல்லாம் திணித்து
வெளியேற்றிய கல்வி முறை..
நல்லது கெட்டதை..
நட்பு, பகையை
துணிச்சலை, துரோகத்தை
மனிதத்தை..
இன்னும் பலவற்றை..
வெளியே போய் கற்றுக் கொள்
என்று வீதியில் விட்டு விடுகிறது..
தானாகத்தான் உருவாகிறார்கள்
ஒவ்வொருவரும்..
சிலர் வீணாகி விடுகிறார்கள்..!