இயற்கையை காதல் செய்

விஞ்ஞான உலகிலே
விலையில்லா பொருளில்லை !
நடமாடும் மனிதனுக்கு
நல்லெண்ணம் சிறிதும் இல்லை !
பணத்துமேலே மோகம் கொண்டு
பந்த பாசத்தினை பழிக்கின்றான் !
பிறர் சொல்லும் வார்த்தை கேட்டு
திசை மாறி செல்கிறான் !
சொகுசான வாழ்க்கை வாழ
தன் சொர்க்கத்தை இழக்கின்றான் !
உதவாத பணத்தை சேர்க்க
உலகெல்லாம் அலைகின்றான் !
இயற்கை அவனிடம் ...
அலைந்தது போதும் !
மனிதனே சற்று நில் !
கடலின் அலையோசை கேள்
அளவில்லா இன்பம் தரும் !
காலை எழும் சூரியனைப் பார்
உன்னை புதிதாய் உயிர்த்து விடும் !
சுற்றி திரியும் பறவையை பார்
உனக்கு பாசத்தை சொல்லி தரும் !
விலையில்லா காற்றின் மொழியை கேள்
உன் செவிக்கு இசை விருந்து தரும் !
இத்தனை அம்சம் உலகில் இருக்கு உனக்காக !
பணம் என்னும் செயற்கை தாள் இனி எதற்காக !
பணத்தை காதலிக்காதே !
தவறான பாதை தரும் !
உன் உறவுகளை காதல் செய் !
உன் நண்பர்களை காதல் செய் !
உன் பெற்றோர்களை காதல் செய் !
உனக்கென இருக்கும் இயற்கையை காதல் செய் !
நல்வாழ்வு தரும் !

எழுதியவர் : M. Santhakumar . (10-Nov-18, 7:07 pm)
பார்வை : 434

மேலே