நிதர்சனம் அழகு

நிதர்சனம்...அழகு…!

நிஜமாய்
ஒரு தூக்கம்
பொய்யாய்
ஓரு கனவு..!

கனவுகளில் வரும்
முழு நிலவு
வானத்தில்
இரசிக்க இயலவில்லை..!

தூக்கம் கலையும் போது
தோட்டமும் இருப்பதில்லை
நிலவும் நீடிப்பதில்லை..
இரவு கனவுகள்
நிறைவு பெறுதலில்..!

பகலில் தூக்கமே இல்லை
பின் கனவுகள் ஏது..?

கனவில்லா உலகில்
முற்றிய இரவின் அமைதியில்
நிதர்சன பௌர்ணமி
இரசிக்க வல்லது..!

உருகாத
வெண்ணை உருண்டையாய்…
தொடுத்த மல்லிகை
சுருட்டிய பூப்பந்தாய்..!
கருகாத தோசையாய்
உருகாத பனி உருண்டையாய்
என்றெல்லாமும்
தோற்றமளிக்கும்
நிதர்சன நிலவு
காட்சிக்கு விருந்தளிப்பது போல்
பொய்த்துவிடும்
கனவு நிலவு
இருப்பதில்லைதான்..!

ஆகாயம் நோக்குகிறேன்
மாதத்தில் ஒருநாள்
நிதர்சன காட்சிக்காய்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (10-Nov-18, 10:54 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 144

மேலே