எது அழகு

வெள்ளி நிலாவை பிரகாசமாக ஜொலிக்க வைக்கும்
இருள் சூழ்ந்த வானம் அழகு!
கடல் நீரை தூய மழைநீராக மாற்றி பொழிய வைக்கும்
கருமேகங்கள் அழகு!
மழைத்துளிகளை ஒன்றாய் சேர்த்து அருவியாய் நீர் உற்ற வைக்கும்
பாறைகள் அழகு!
ஓர் உயிரைத்,தன் உயிரில் இணைத்து குழந்தையாய் உருவாக்கி பிறக்க வைக்கும்
தாய்மையின் கருவறை அழகு...

எழுதியவர் : பி.திருமால் (11-Nov-18, 5:50 pm)
Tanglish : ethu alagu
பார்வை : 323

மேலே