இனையப்போராட்டம்

இனைய போராட்டம்
Me too
"""""""""""""
யாரும் தொட்டும் பார்க்க
பயப்படும்
விசயத்தை அவள்
எடுத்துச்சென்றது பரபரப்பாக இருந்தது!!
காலம் கடந்து சொல்லும்
முறைப்பாடு உயிரோட்டம் இல்லாத
பழங்கஞ்சி என்று தள்ளிவைக்கமுடியாது!
பயங்களை கடந்து
சில முன்னோடிகளை பின்தொடர்ந்து சம்பிரதாயங்களை விலத்தி
முன்னேற.சிலகால அவகாசம்
தேவைப்பட்டிருக்கலாம்!
முதளாளித்துவ பிரபலங்களின் கைவரிசைக்கு
ஒத்துப்போகாவிடின்
வாய்ப்புக்கள் பலியாவதும்!
திறமைகள் தாக்கப்படுவதும்
விபத்தாகிறது!
எதிர்ப்பில்லாத ஒத்துப்போதலின்
கூலியாக தொடர்ச்சியான சிபார்ஸ்சும் திறமையற்ற கலபட கவர்ச்சியான படைப்புக்களுக்கே
வளிவகுக்கிறது

பிரபலங்களின் பொதுவாழ்வு
கேள்விக்குறியாகிவிடும் என
கவலைப்படும் அபிமானிகள்
சபலச்சாக்கடைகளினால்
குதறப்பட்டு
காயப்பட்டவர்களின் மனநிலையை நினைத்துப்பார்க்க வாய்பில்லை.

தொடர்ச்சியான வலைத்தளபதிவுகளில் சில பொய்கள் கற்பனைபடுத்தப்பட்டு
சிலர் பாதிக்கப்பட்டிருந்தாலும்
அநீதியை சந்தித்தவர்கள்
துணிச்சலுடன்
வலைத்தளங்களில் பதிவிடுதளின்
மூலமாக,
குற்றங்கள் புரிபோர் தோல் உரிக்கப்படுவார்"""
என்ற பயம் அதிகம்
இருக்க வாய்புண்டு!!!

எழுத்து லவன்
"""""""""""""''''"""''''''""""""

எழுதியவர் : லவன் டென்மார்க் (11-Nov-18, 10:50 pm)
சேர்த்தது : லவன்
பார்வை : 47

மேலே