புத்தாண்டு பிரார்த்தனை

காலத்தின் கோலமாய் தமிழ் ஆண்டு வடிவான பால குகனே
ஆண்டின் ஆறிரு மாதந்தோரும் இனிது வாழ வேண்டும்
ஆறு முகமான அறுவகை காலந்தோரும் இனிது வாழ வேண்டும்
செய் தொழிலே வேலாய் காத்திட இனிது வாழ வேண்டும்
ஏறி அமர்ந்த கர்மத்தில் ஜெயகொடியுடன் வாழ வேண்டும்
அறம் செரிந்த அறிவார்ந்த ஆசைகள் துணை செய் இனிது வாழ வேண்டும்
காலத்தின் அடியவராம் அனைத்துலக மாந்தரும் இனிது வாழ வேண்டும்
புத்தாண்டாய் பிறந்திட்ட ஆறுமுக பாலகனே நின் கழல் வேண்டும் .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (13-Apr-16, 1:04 pm)
பார்வை : 271

மேலே