தென் தமிழ் நாடெனும் போதினிலே
தென் தமிழ் நாடெனும் போதினிலே
பொதிகை தெம்மாங்கு தமிழ் வந்து பாயுது காதினிலே
முக்கூடல் சங்கமத்தில் மலரும் செங்கமல ஆதவன் ,
பொன்மணி நீரலைகள் சுந்தர காட்சிகள் பாயுது கண்களிலே
பொதிகை மலை மூலி மணம் தவழ்ந்து வந்து பாயுது நாசியிலே
குமரிக் கடல் காற்றும் பசுமலை தென்றலும் மோதுது மேனியிலே
முத்தமிழ் கூடும் சங்கத்தில் மலர்ந்த தமிழ் பொற்கமலம்
கடந்த கால நினைவலைகள் வந்து பாயுது சிந்தையிலே
பொறி ஐந்தும் பூரித்திட , புவியில் ஓர் தனி நாடு
உளியின் ஒலியில் கல்லிலே கண்ணொளி திறந்திடும்
தென் பரத கலை திரு நாடே , என் தாய் தமிழ் திரு நாடே
உன் மடியில் யான் தவழ என்ன தவம் செய்தேனோ !