ஒரு முறை

​​​​ஒரு முறை திரும்பியோ மெய் சுடரே​​
ஒரு முறை பேசாயோ ஆம்பல் துளிரே

நீலவானில்​ முகில் ஒன்றாய்​ ​கூடி
கடிகாரம்​ பாராமல் ​மழை தூவ
குடையின்றி இருவரும்​ சேர்ந்து​​
மலராய் ​​​நனைவோம் வா​​
​​
அவ் மண்​ ​வாசம்​​
பிறந்த குழந்தையின் பாத​​ம்
​தேகம்​ ​தொட்டு​ ​​
இதழ்களை இணைப்போம் வா
​​
மஞ்சத்தில் ரோஜா போல் நீ கிடைக்க
தலையணை பூக்கள் உன்னை சொரிய
இமை போல் உன்னை காப்பேன்
தென்றல் தீண்ட அனுமதி மறுப்பேன்

மையிட்ட கண்கள்
மயில் இறகாய் இதயத்தை வருட
கனா உலகில் உன்னுடன்​ ​இருக்க
நிஜம் தேவையில்லை
அந்த பொய் போதுமே
நான் வாழ

அடி தோழி
என் உயிரின் நாடி
பல ஜென்மம் வேண்டி
உன்னைக் கண்டேன்

முதல் வார்த்தை பேசிய போது
முதல் முறை சிரித்த போது
முதல் முத்தம்​ தந்த​ ​போது​​
என் உயிரில்
புது வெள்ளம்
என் கனவில்​​
புது படம்

வேண்டும் நீ வேண்டும்
உன் மொழி
தினம் கேட்டு
நிலவு பூக்க வேண்டும்

தோள் மீது சாய்ய
மடி மீது ​நீ தூங்கி
உன்​ சோகம் மறக்க
இமைக்கம்மால் உன்னருகே அமர்ந்திருப்பேன்

உன் கண்ணின் நீரை துடைத்து
கவலையயை காற்றில்​ ​கரைத்து
என்றும்​ ​உன்னை ​
மனதில் ஊஞ்சல் கட்டி தூங்க வைப்பேன்​.........​

எழுதியவர் : கண்மணி (11-Feb-17, 1:54 am)
Tanglish : oru murai
பார்வை : 1367

மேலே