பெண் அழகு

சொர்க்கத்தை நான் கண்டேன் ..,
சொக்கி இங்கு நான் நின்றேன் .

பெண்ணவளின் பித்தத்தால்
பிடிவாதம் நான் கொண்டேன் .

இடையோடு இசைந்தாட ..
குழலாக நான் கேட்டேன் .

கூந்தலோடு விளையாட
கை விரலை கெஞ்சுகின்றேன் .

விழியோடு வளைந்தாட
அவள் புருவமாக வேண்டுகின்றேன் .

மார்போடு கோலமிடும்
அணிகலன்கள் நானாக ..,

காதோடு கவி பாடும்
கவியரசு நானாக ..,

மணிக்கட்டில் முத்தமிடும்
கை வளையல்கள்
அவளோடு ..

அவள் மேனி உறவாடும்
நூலாடையாக நான்
மாற ..,

காலோடு இசையெழுப்பும்
கால்கொலுசு நானாக ..

இதழோரம் தேன் எடுக்கும்
தென்மாங்கு நான் பாட ..,

மகிழ் மஞ்சம் அவளோடு
உலவ வேண்டும் வான்
நிலவோடு ..,

முத்துப்பல் சிரிப்பில்
முத்துக்களை நான்
பதிக்க..,

சிற்பத்தின் இரு கோபுரம்
இரு விழியோடு எனை
வாட்ட ..,

மடல் பதித்த அவளோடு
நாத குழல்
நான் இசைக்க ..,

பளிங்கு மேட்டில்
நான் படர
என்ன தவம்
செய்தேனோ ....!

என்னவளின் காதலால்
தீராத மோகத்தால் ..,

திரண்டு வரும்
காமத்தால் ..,

திகட்டாத இன்பவானில்
உலா வருவோம் ..,

மன்னவனாய் எனை
மாற்று ..,

ஊடல் உலகம் ..,
நாம் செல்ல ..,

எண்ணிலடங்கா உன் அழகு
வா ..!

என்னோடு நீ
உலவு.,

நீ தானே ..!
என்
களவு ..,

போட்டி கவிதை -பெண் அழகு

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (11-Feb-17, 1:11 am)
Tanglish : pen alagu
பார்வை : 2645

மேலே