பரிசம் போடக் காத்திருக்கேன் - நாட்டுப்புறப் பாடல்
பரிசம் போடக் காத்திருக்கேன்
பருவப்பெண்ணே கிட்டவாடி
உதிக்கும் உன் சிரிப்பாலே
உலகத்தை வெல்லடி !
அத்தைமகன் பரிசம் போட
அக்கா மகளே ! நீயும் வர
பத்திரமா நெஞ்சுலேயும்
பாதகத்தி உனை வெச்சுருப்பேன் !
முத்தம் ஒன்னு நீ தந்தா
சித்தம் பிசகி போயுடுமே !
மொத்தமாகக் கொள்ளை கொண்ட
மோகமுள்ளும் நீயடியோ !
உத்தமனும் நா தானே
உரிமையிலே பொண்ணு கேட்க
ஓரக்கண்ணால் நீபார்க்க
ஒய்ந்திடுமா உன் நெனவும் !
அக்கா மக ரத்தினமே !
அழகுல நீ சித்திரமே !
மணப்பாற சந்தையில
மல்லிப்பூ வாங்கி தாரேன் !
மாலையோட நானும் வந்தா
மகராணி பூத்திடுவ ....!
காலையில வெத்தலப்பூ
தட்டோட வாரேன் புள்ள !!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்