காதல் சுவாசம் - மரபு கவிதை
காதலினால் வந்திடுமே
------ காலைக்கும் சுவாசமே !
மோதலினால் மூழ்கடிக்க
------ மோதுகின்ற என்காதல்
நோதலுக்குத் தள்ளாது
------ நோயநோடியும் வாராது
சாதலுக்கு மாற்றாகச்
----- சாற்றுகின்றேன் நாளும்நான் !!
வாழ்க்கைக்கு இன்பத்தை
------ வழங்குகின்ற நற்காதல்
தாழ்ந்திடுமா காசினியில்
----- தரமான என்காதல்
வீழ்ந்திடுமா செவிகளிலே
------ விந்தையான என்னவளே !
ஆழ்ந்திடுவோம் நேசத்தால்
------ அலையெனவே கடலினிலே !
இசைக்கின்ற என்கையிலே
------ இசையாகிப் போய்விடுவாய்.
பசைபோல நமதுள்ளம்
------- பசுமையான நினைவுகளால்
அசைபோடும் என்றுமினி
------ அகலாதே எனைவிட்டே .
திசைதோறும் உன்நினைவு
------ திண்டாடும் என்னிதயம் !!!!!
தனிமையிலே வாடுகின்றேன்
----- தள்ளாடித் தவிக்கின்றேன் .
நனிமகளைக் தேடியும்நான்
----- நாடெல்லாம் அலைகின்றேன்
இனிஎனக்கே எப்பொழுதும்
----- இன்பமிலை காதலினால்
பனிக்காலம் வாட்டிதிங்கே
------ பருவமகள் தொலைந்திடவே !!!!
கண்ணீரும் கதைசொல்லும்
------ காவியமும் படைத்திடுமே
விண்ணுலகின் வியன்பொருளே
----- விரைந்துநீயும் வந்திடுவாய் .
எண்ணமெலாம் நீயன்றோ
------ என்னுயிரே வாடுகின்றேன்.
பண்பலவும் பாடிடுவேன்
------ பாசத்தால் தேடிடுவேன் .
காதலியைத் தேடுகின்ற
----- காளைநான் நெஞ்சத்தில்
கீதங்கள் இசைத்திடுவேன்
------ கிட்டிடுமா என்காதல் .
மோதல்கள் வேண்டாமே
------ மோகமுள்ளும் நீதானே !
சாதலுக்குப் பிறக்கவில்லை
------ சாதிப்போம் காதலிலே !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
இவ்கவிதை என் சொந்த படைப்பு .