இல்லறமே நல்லறம் - மரபு கவிதை
இல்லறமே நல்லறமாய்
----- இனிதான வாழ்க்கையிலே
சொல்லுகின்ற சோகங்கள்
----- சொர்க்கமாகித் தீர்ந்துவிடும் .
பல்லுயிரும் ஒம்புதலும்
----- பரிவுடனே நடந்திடுதல்
வல்லதொரு வாழ்வுநெறி
----- வளம்பெருகும் கண்டிடுவீர் !
உள்ளங்கள் புணர்கையிலே
------ உணர்சிதனைப் பார்ப்பதில்லை
கள்ளங்கள் ஏதுமின்றி
------ கற்புடைய நெறிவழியே
பள்ளமாகப் பாசத்தைப்
------ பாதுகாத்தல் நன்னெறியே !
முள்ளாகிக் குத்தாது
------ முழுவதுமே இன்பங்கள் !!!
திருமணத்தின் சான்றாகத்
------ தித்திக்கும் இல்லறமே !
வருத்தமில்லை வாழ்க்கையிலே
------ வந்திடுமே செல்வங்கள் !
பொருத்தமான மணமக்கள்
------ பொருந்தியுமே நல்வாழ்க்கை
திருப்பங்கள் ஏதுமின்றித்
------ திண்ணமுடன் வாழ்வரிங்கே !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

