வீணையடி நீயெனக்கு - மரபு கவிதை

வீணையடி நீயெனக்கு
----- விருப்பமாக இசைக்கின்றாய் !
ஊணுதலும் விட்டுவிட்டேன் .
----- உறவாடும் உன்னாலே !


ஆணையிடு ஆருயிரே !
------ அற்புதங்கள் செய்திடுவோம் !
காணிக்கைத் தந்திடுவேன்
------ காதலினை எந்நாளும் !


மாணிக்க வீணைதனை
------ மரகதமே மீட்டுகின்றாய் !
பாணிப்பூ வைத்தென்னைப்
----- பரவசமாய் அழைக்கின்றாய் !


வீணாகும் உன்னிளமை
------ விலகாதே எனைவிட்டும் .
நாணயத்தின் நாயகன்நான்
------ நம்பிக்கைத் தாராயோ !!!



ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Feb-17, 11:02 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 92

மேலே