துன்பத்தை தந்த பெண்ணே

நீ எங்கே என தேடினேன்
காதல் தீயில் எரிகிறேன்
உன்னால் உறவை இழந்து
என் உணர்வையும் கொன்றேன்

காதலை ஏனடி மறைக்கிறாய்
என்னை காண ஏன் மறுக்கிறாய்
கண்களால் உயிரை சீண்டி
மௌனத்தால் வென்றவளே

நிழலென தொடர்ந்தவனை
ஏனடி வெறுக்கிறாய்?
ஏனென்று கேட்டவனை
கேள்விக்குறியாக்கி வீதியில் நிற்க செய்தாய்

ஒவ்வொரு நொடியும் உன்னால் இறக்கிறேன் 
மீண்டும் உன் நினைவினால் உயிர்த் தெழுகிறேன்

எனது சிறகை உடைத்து
தனிமை சிறையில் அடைத்து
வாழ்வில் இருளை தந்து  
தீவில் வாழ செய்த பெண்ணே

நம்முள் நடக்கும் நாடகம் கண்டு
மனம் ஒருபுறம் சிரிக்க
மறுபுறம் உன்னை வெறுக்குதே

நேசத்தை மறந்து
துன்பத்தை தந்த பெண்ணே
உன் அன்பை பால்மணம் தினமும் கேட்குதடி

உள்ளம் வலிக்குதடி
தனிமை கொள்ளுதடி
வலியை தந்தாலும்
நீ வேண்டுமென இதயம் கரையுதடி

வார்த்தை பேசாதே
விழிகளால் நயனம் காட்டாதே
நீ வந்தால் போதுமே
மீண்டு வருவேன்
மீண்டும் உன் இதழ்களை
என் அன்புக்கு ஏங்கச் செய்வேன் செல்லமே

எழுதியவர் : கண்மணி (21-Aug-19, 5:50 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 485

மேலே