எங்கே நம் மனிதம் அஷிஃபா

எட்டு வயது சிறுமி அவள்
மான் போல் துள்ளிக் குதித்தவள்
உலகில் உள்ள அனைவருமே அவளுக்கு அன்பானவர்கள்

தீமை என்னும் சொல்லக்கூட அறியாதவளுக்கு
தெய்வங்கள் சாட்சியாய் நடந்தது அந்த வெறியாட்டம்

இந்நாட்டில் பெண்களை கடவுள் என்பர்
பெண்களை தேவியாய் கோவில்களில் தினமும் பூஜிப்பர்
அப்படிப்பட்ட இடத்தில் காமத்திற்க்காக தன் உயிரை நீத்தல் அக்குழந்தை

அங்கே கூடி இருந்த தெய்வங்களை (கற்சிலைகளை) கேட்கிறேன்
அந்த கொரூரம் நடந்த போது
உங்கள் விழிகளில் ஓளி இழந்துவிட்டதா
கைகள் என்ன கட்டப்பட்டு இருந்ததா
அந்த உயிரின் கீச்சல் தான் செவியில் விழவில்லையா
இல்லை அஷிஃபாவும் ஆயிரத்தில் ஒன்று என மனம் மரத்துவிட்டதா.

அந்த கொடூரத்தை நிகழ்த்தியவனின்
ஆண்மையை அழித்து
சதைகளை கிழித்து
குருதி சொட்ட சொட்ட
அவனுடைய ஒவ்வொரு திசுவும் வேதனையில் கண்ணில் சிந்த
"தயவு செய்து கொன்றுவிடுங்கள்" என கெஞ்சும் வரை தருமத்தை தரவேண்டிய காவல்துறை
வெறும் காசுக்காக
அத்துனை பேரையும் தப்பிக்கவிட நினைத்த
எலும்பில்லா கூட்டத்தை முதலில் என்ன செய்வது?

குற்றம் புரிந்தவன் சட்டத்தின் ஓட்டையில் தப்பிப்பதும்
அதில் பாதிக்கபட்டோர் தண்டனை அனுபவிப்பதுமே
ஜனநாயக இந்தியாவில் வாடிக்கை

இப்படிப்பட்ட அநீதியை தடுக்க
சட்டத்தில் மாற்றம் கொண்டுவராமல்
அரசியல்வாதிகளும் நீதித்துறையும் ஏன் தவறிக் கொண்டே இருக்கிறார்கள்

தந்தை முதல் தமயன் வரை
நண்பன் முதல் பழகியோர் வரை
பெண்ணின் தேகத்தை ருசிக்க
ஓநாய் போல் அலையும் கூட்டத்திற்கு நடுவில்
கைதி போலத் தான் அவளின் தினசரி வாழ்கை

இன்று நடந்தது அஷிஃபாவுடன் முடியப் போகிறதா
இல்லை இல்லவே இல்லை
வருங்காலத்தில் இன்னும் எத்துனையோ அஷிஃபா, நிர்பயா
தன் மனத்திற்காக போராட முடியாமல் உயிரை விடப்போகிறார்களோ
என்று நினைக்கும்போதே மனம் எரிமலையாய் கொதிக்கிறது

கள்ளிப்பால் கொடுத்து பெண்சிசுவை கொன்றவர்கள்
இனிவரும் காலத்தில் ஆண்சிசுவை கொன்றாலும் ஆச்சரியமில்லை.

அஷிஃபாவிற்கு நடந்து போல்
மீண்டும் ஒரு துயர சம்பவம் நடக்காமலிருக்க
அவள் மீண்டும் இந்தியாவில் பெண்ணாக பிறக்காமலிருக்க வேண்டிக் கொள்கிறேன்

குறிப்பு:
ஜாதி, மதம், மொழி இவை வைத்து தான் இன்றைய அரசியல் நடக்கிறது. அரசியலால் நம்முள் எத்துனை பிரிவினை. இதனால் நாம் மனிதன் என்பதையே மறந்துவிட்டு
"என் ஜாதிக்காரன் தவறு செய்தல் பரவாயில்லை,என் மதத்தின் தலைவன் கற்பழித்தலும் அவனை மதத்தின் பெயரால் காப்பாற்றுவேன். செத்தது குழந்தையாய் இருந்தாலும் கர்ப்பிணியாக இருந்தாலும் எனக்கென்ன" என்பதை முதலில் மாற்றுங்கள் ஒரு குழந்தையின் கரைச்சல் நம்முள் மாற்றம் தரவில்லை என்றால் நாம் நடமாடும் பிணம்.

காமம் தான் மனித குலத்தை இத்துணை ஆண்டுகள் வாழ வைத்தது. ஆனால் இன்றோ அது மனித நெறியை மீறி தாய், சொந்த மகள், தோழி, பச்சிளம் குழந்தை என எல்லோரையும் தின்ன ஆரம்பித்துவிட்டது . தயவு செய்து பெண்களை பொருளாய் பார்க்காமல் ஒரு உயிரைய் பார்க்க பழகுங்கள். குற்றம் குறைய சட்டமோ தண்டனையோ எதுவுமே உதவாது தனிமனித ஒழுக்கம் மட்டுமே மனிதத்தை காப்பாற்றும்.

வாழ்க இந்தியா
வாழ்க ஜனநாயகம்

நன்றி
கண்மணி

எழுதியவர் : கண்மணி (19-Jul-18, 2:24 am)
பார்வை : 2604

மேலே