காதல்
விடியும் வரை என்னுடன் இருக்கிறாய்
விடிந்தவுடன் மறைந்து செல்கிறாய்
கண்ணுக்குள் காதல் வார்க்கிறாய்
நெஞ்சுக்குள் ஆசை வளர்க்கிறாய்
நினைக்கிறேன் மறுகணம் தோன்றினாய்
மறக்கிறேன் போக மறுக்கிறாய்
நினைக்க மறந்தால் கனவாய் வருகிறாய்
மறக்க நினைத்தால் உயிர் வலியாய் மாறினாய் - கண்மணியே