உன் அழகு

அந்த ஒற்றைக் கல்லின்
அருகில்தான் நான் நிற்பேன்
சற்று தூரத்தில்தான் நீ நிற்பாய்.
வெள்ளிக்கிழமை என்றாலே
கூந்தலை பின்னிய அழகும்
அவ்வழகை மேலும் அழகாக்கும்
மல்லிகைப்பூவும் மிக
நேர்த்தியாய் அணிந்த புடவையும் நெற்றியில்
நீயிடும் வண்ண பொட்டும்
காதோர ஜிமிக்கியும் உன்
முக ஒப்பனையும் முத்துக்களோடு
நீ சிந்தும் புன்னகையும்
வான்நிலவு ஆடையுடுத்தி
மண்ணில் வந்து
என்னை ஆளவோவெனெ
தன்னை மறந்த நிலையில் நான்
நிற்கையில் உன்னுடல் வாசனையை சுமந்து வந்து
காற்று என்னை எழுப்பும்
காதல் கவிதையை பாட
அழைக்கும்.
அவ்வொற்றைக்கல்லும்
உன்னழகில் உருகி நிற்கும்.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (2-Dec-17, 7:44 pm)
Tanglish : un alagu
பார்வை : 770

மேலே