அவள் குறுஞ்செய்தி
காந்தக் காற்றிலே ஈர்கப்பெற்ற மழைத்துளிகள்
சாரல் சாரலாய் தூவி
நீலவானம் கருமேகத்தில் மறைந்து
சீற்றமிகு சூரியனை உறங்கச் செய்தனவோ
கூவிக்குழாவும் குருவிகளும் அதிகாலையை மறந்தனவோ
மாடுகளும் மயில்கூட்டங்களும்
ஆடுகளும் சேவற்கூட்டங்களும்
பொழுதுவிடிந்ததை உணர வில்லையோ
எல்லாம் மயங்கிமறந்து உறங்கிவிட
மல்லிகைமலர் விரல்நுனிகள் எழுதும் ஓர் குறுஞ்செய்தி என்னை எழுப்புகிறதே!