கவிதையாய் இனிப்பவளே
கவிதையாய் இனிப்பவளே !!
——
கவிதையாய் இனிப்பவளே
காவினில் பூத்தவளே /
தவித்திடச் செய்தவளே
தாமரைக் குணத்தவளே /
விழிகளில் விழுந்தவளே
விந்தையின் திருவுருவே /
வழியெலாம் வருபவளே
வளர்மதி ஒளிமகளே /
சேலத்து மாங்கனியே
செவ்வியத் தமிழ்க்கவியே /
ஞாலத்தில் உனைப்போன்ற
நல்லாள் எவருமுண்டோ /
நல்வினைக் கூடியதால்
நங்கையை நானடைந்தேன் /
பல்கலை வித்தகியை
பக்கத்தில் வைத்துவிட்டேன்/
காலங்கள் இனிமேலே
கலைவளர் வசந்தங்களே /
கோலங்கள் விரிவடையும்
குதூகலம் ஆரம்பமே !!
-யாதுமறியான்.