மாதுளையில் காதல் வலை
---------------காதலனும் காதலியும் மாதுளங் கனியை ரசித்து ஒருவருக்கொருவர் அன்போடு பாடும் பாடல்-------------------------------
ஆண்: மாதுளங் கனி நீயோ
பெண்: மாது உளமறி(ந்த) கவி நீயோ
ஆண்: மாதுளை முத்துக்கள் உன் பற்கள்
பெண்: மாதுளை மொட்டுக்கள் உன் கண்கள்
ஆண்: மாதுளை கனிரசம் உன் உமிழ் நீர்
பெண்: மாதுளை ரசநிறம் உன் உதிரம் (செந்நீர்)
ஆண்: அரை மாதுளங் கனிகள் உன் கன்னம்
பெண்: இள மாது என் மனதில் உன் எண்ணம்
ஆண்: மாதுளை மலரின் வனப்பு நீ
பெண்: மாதுளை மலரை மூடிய குருத்து நீ
ஆண்: மாதுளை முளைத்த ஈரானிய ராணி நீ
பெண்: எனை பாரதம் ஏந்தி வந்த கவிஞன் நீ
பெண்: மாதுளை செடியாக நான்
பெண்: செடியில் கிளையாக நீ
ஆண்: கிளையில் காம்பாக நான்
ஆண்: காம்பில் கனிந்த கனியாக நீ
சுவைக்க சுவைக்க தித்திப்பு - பழரசம்
பருகப் பருக மலரும் பொல்லாப்பு - இன்பச்
சுவையுள் உன்னை மிஞ்சிய இன்பம் உண்டோ
சொந்தப் படைப்பில் தோன்றா கற்பனையும் உண்டோ?