காதல்

சட்டென்று மாறுது வானம்
போர்வையாய் போர்த்துது மேகம்
சில்லென்று வீசும் காற்றில்
பனி தூறல் இன்பம் தருதே

நான் உடல் இதயம்
நீ உயிர் துடிப்பு
என் தனி வாழ்வில்
உன் துணை அழகு

நான் கொண்ட கோபம் உன் பேச்சினில் குறையும்
நான் கொண்ட மையல் உன் அழகினில் கூடும்
உன்னுடன் இருப்பதே என் மனம் எண்ணும்
உன் பிரிவென்பதோ கடும் புயல் வெள்ளம்

நீ மலர் நான் தேனீ
நீ மலர்ந்தால் நான் சுவைப்பேன்
நீ மொழி நான் கவி
நீ சிரித்தால் நான் படைப்பேன்

எழுதியவர் : மோகன் ராஜா - மோ ரா (17-Dec-15, 11:50 am)
Tanglish : kaadhal
பார்வை : 120

மேலே