தொடர்கிறேன்-உன்னை

தொலைத்து விட்டு தொடர்கிறேன்-உன்னை
தொலைத்ததே தெரியாமல்
திரும்பி பார்த்தேன் உன்னை ஒரு -நொடி
இழந்தேன் என் பார்வையை சில-நொடி
இமைக்காமல் உறைந்தேன்-தினமும்
தொடர்ந்தேன் நீ செல்லும்-பாதை
ஆனால் ஒரு நாள் கூட-இல்லை
நான் உன் பார்வையில்....

உணர்ந்தது என் மனம்-மறுத்து
என் காதல் மோகம்
காத்திருந்தேன் உன்னை காலையில்-நீ
பள்ளி செல்லும் பாதையில்
விழி வைத்திருந்தேன் - நீ
வீடு செல்லும் வழியிலும்
சிதறும் என் சிந்தனைகள் நீ
சிந்தும் சிறு சிரிப்பில்-ஆனால்
நான் ஒரு போதும் என்னவில்லை-நீ
மறுப்பாயென்று உன் மனதில்
சிறையிட என்னை..........

என்றும் உன் நினைவுகளுடன்,,,,,

எழுதியவர் : ஜிஹாஸ் (17-Dec-15, 1:38 pm)
பார்வை : 184

மேலே