அன்பென்றாலே அவள்தான்

வினாத் தாளினை வாங்கியதுதான் தாமதம்
அன்பு எனத் தொடங்கும் குறளை
அடிபிறழாமல் எழுதுக
வினாவை படித்தவன் விடுவிடுவென எழுதிவிட்டேன்
ஏழுச் சீர் இரண்டடியில்
"அவள் பெயரை"
ஆமாம்
அன்பென்றாலே எனக்கு
ஆதியும் அந்தமும் அவள்தான்

எழுதியவர் : மணி அமரன் (5-Nov-15, 10:07 pm)
பார்வை : 170

மேலே