இயற்கைக்கு வழிவிடுங்கள்

நேற்று
வீடுகளுக்குள் புகுந்து
பாலங்களை உடைத்து
சாலைகளை தகர்த்து
வாகனங்களை கவிழ்த்து
உயிர்களை குடித்து
ஊரையே வெள்ளக்காடாய்
மாற்றிய மழை நீர்

இன்று
அளவாக ஆர்பாட்டமில்லாமல்
அச்சமூட்டாமல்
அழகாக அமைதியாய்
அதன் கரைக்குள் பயணித்து
அதன் இறுதி போய் சேர்கிறது

ஏற்ப்பட்டது வெள்ளப்பெருக்கம் அல்ல
ஆற்றின் சுருக்கம்!
ஏரியின் முடக்கம்!
குளங்களின் அடக்கம்!
கால்வாய்களின் குறுக்கம்!

இனியாவது
ஆறுகளை அகலப்படுத்துங்கள் !
ஏரிகளை தூர்வாருங்கள் !
குளங்களை ஆழமாக்குங்கள் !
கால்வாய்களை சுத்தமாக்குங்கள்!

அவற்றின் இடங்களை ஆக்ரமித்தால்
உங்கள் இடங்களில் அவை குடிகொள்ளும்

நீரின் வழித்தடங்கள் எல்லாம்
குப்பைகள்
குடியிருப்புகள்
கல்லூரிகள்
தொழிற்சாலைகள்

கொட்டி தீர்த்தீர்கள் குப்பைகளை
கட்டி தீர்த்தீர்கள் கட்டிடங்களை
அது அழித்து தீர்த்து உங்களை

குறுக்கிடாதீர்கள் நீரின் வழியில்
இனியாவது இயற்கைக்கு வழிவிடுங்கள் !!!

எழுதியவர் : (7-Dec-15, 7:59 pm)
பார்வை : 204

மேலே