மழையே எங்களை வாழ விடு
நில்லாமல் மூன்று நாட்களாக
எங்கள் மீதிருந்த அளவற்ற
பாசத்தினால் நீ கொட்டி சென்ற
ஒவ்வோர் துளியும் கடலாக
தெரியுதே எம் கண்களுக்கு
நீ கொடுத்து சென்ற நீரெல்லாம்
இன்று எம் கண்களில் கண்ணீராய் ஓடுகிறதே
அது தெரிந்தும்
இன்றும் நீ வந்து கொண்டிருக்கிறாய்
கண்ணீர் வேண்டாம் என்றா
உனக்கு எம் செந்நீர் தான்
வேண்டும் என்றால் கொன்றுவிடு உன் அன்பால்
அப்பால் நீ எம் செந்நீரை பருகலாம்
உன் தாகம் தீரும் வரை
உன் தாகம் தீர்ந்த பின்னாவது
எம் மக்களில் நல்லோரை
பல்லாண்டு வாழ வை
உன் அளவான அன்பினால்
வளமாக வாழ்ந்திடுவோம்
இனிமேல் எந்த தவறும் இழைக்காமல்
இயற்கை அன்னையை கசக்காமல்
வாழ விடு மழையே எங்களை வாழ விடு..