பேய் மழை
மனம் போன போக்கிலே
மனை போட்ட மக்களே
பணம் போன பாதையிலே
நடை போட்ட மக்களே
பார்த்திரா நம் நிலைமை
பார்த்திரா
ஏழை என்று ஒதங்கவில்லை
பணக்காரன் என்று விடவில்லை
குடிசை என்றும் பார்க்கவில்லை
மாளிகை என்றும் நினைக்கவில்லை
தொட்டு தழுவி கட்டி புரண்டு
அடித்து சென்றாய் (மழை நீர் )
ஓடி ஓடி உழைத்திட்டோம்
பொருள்தனை சேர்த்திட்டோம்
இயற்கைதனை பகைத்திட்டோம்
இழந்திட்டோம் உடமைகளை
மும்மாரி பொழிவதனை
மூன்று நாளில் பொழிந்ததினால்
பொழிந்திட்ட நீர்தனை சேர்பதற்கு
தேடிட்டாய் ஏறிதனை
வழி தெரியாமல் போனதினால்
வந்திட்டாய் இல்லம் நோக்கி
வரவேற்க மனமிருந்தும்
இடமில்லை இல்லங்களில்
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்
வரவேற்க ஆளில்லை என்றதினால்
கொண்டாயா கோபம்தனை
காடிட்டாய் உன்வெரி ஆட்டம்தனை
இழந்திட்டோம் எம்மக்களை
எம் உடைமைகளை
இருந்தாலும் சொல்லிட்டோம் நன்றிதனை
மனிதமும் மனிதநேயமும் கண்டிட்டொம்
இந்திய தேசம் இந்திய மக்கள்
எம்மோடு என்று உணர்ந்திட்டோம்
ஜாதி மதம் இனம் பொயென்று
பறைசாற்றிட்டோம்