தனி ஒருத்தி
பொன்னில்லை கையில்
பொருளில்லை
மண் திண்ணும் இந்த
பெண்ணுடலை
காப்பதிங்கே பெரும்பாடு
ஆணொருவன் துணையிருந்தால்
அடுத்தவன் தொல்லை சற்றே குறையும்
கேட்பாரற்று தனித்திருந்தால்
கேவலம்தான் அவளின் நிலை
பார்வையெல்லாம் முள் கிரீடம்
பேச்செல்லாம் குத்தூசி
ஆண்கள் பேச்சு அருவருப்பு
பெண்கள் பேச்சு அவதூறு
உயிரோடு பிணமாகும்
உள்ளமது தினம்தினமும்
ஏனிந்த உயிரெனக்கு
என்றெண்ணி தினம்சாகும்
பெண் ஜென்மம் பெருந்துன்பமே !