தீபாகுமரேசன் நா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/ivaef_32310.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தீபாகுமரேசன் நா |
இடம் | : இராமநாதபுரம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 1209 |
புள்ளி | : 347 |
ஊரு முழுக்க என் பேரு சொல்ல
உறவு வருதுன்னு தெரிஞ்சுகிட்டேன்..
உயிருக்குள் உயிரை வைச்சு
அடிக்கடி
உன்னை தொட்டு பார்த்துக்கிட்டேன்..
புத்தகம் பல படிச்சிருக்கேன்..
பகவத்கீதையையும் கரைச்சு குடிச்சுருக்கேன்..
மாசம் மாசம் நீ வளர
மந்திரமும் சொல்லி இருக்கேன்..
குழந்தை நீயும் வரும் வரை
மாறும் ஹார்மோனில் தவம் இருக்கேன்..
சின்ன சிட்டே நீயும் வந்து
சிரிச்சுகிட்டே பாடுவாயோ..
அகிலம் மறக்க என்னை கட்டி...
மழலை பேச்சு இசையினிலே
அம்மா என்ற ஸ்வரம் மீட்டி...
ஊரு முழுக்க என் பேரு சொல்ல
உறவு வருதுன்னு தெரிஞ்சுகிட்டேன்..
உயிருக்குள் உயிரை வைச்சு
அடிக்கடி
உன்னை தொட்டு பார்த்துக்கிட்டேன்..
புத்தகம் பல படிச்சிருக்கேன்..
பகவத்கீதையையும் கரைச்சு குடிச்சுருக்கேன்..
மாசம் மாசம் நீ வளர
மந்திரமும் சொல்லி இருக்கேன்..
குழந்தை நீயும் வரும் வரை
மாறும் ஹார்மோனில் தவம் இருக்கேன்..
சின்ன சிட்டே நீயும் வந்து
சிரிச்சுகிட்டே பாடுவாயோ..
அகிலம் மறக்க என்னை கட்டி...
மழலை பேச்சு இசையினிலே
அம்மா என்ற ஸ்வரம் மீட்டி...
நீல வான போர்வை தாங்கிய
வெண்மேக பூக்களாய் கண்டேன் அன்று...
மண்மீது நான்...
நூல் கொண்டு கட்டாமல்
ஆங்காங்கே கீழே தொங்கும்
அழகான பஞ்சாய் காண்கிறேன் இன்று...
ஆகாய விமானத்தில் நான்...
அறிவியலாய் பார்க்க தோன்றவில்லை அறிவிற்கு... அதனால்
இயற்கை அழகாய் மட்டும்
ரசித்து விட்டு போகிறேன்...
நீல வான போர்வை தாங்கிய
வெண்மேக பூக்களாய் கண்டேன் அன்று...
மண்மீது நான்...
நூல் கொண்டு கட்டாமல்
ஆங்காங்கே கீழே தொங்கும்
அழகான பஞ்சாய் காண்கிறேன் இன்று...
ஆகாய விமானத்தில் நான்...
அறிவியலாய் பார்க்க தோன்றவில்லை அறிவிற்கு... அதனால்
இயற்கை அழகாய் மட்டும்
ரசித்து விட்டு போகிறேன்...
நிஜங்களை சேமித்தேன்
நிழற்படங்களாய்;
சம்பாஷனைகளையும்
கணினி பதிவுகளாய்;
என்னைப்பிரிந்து எங்கோ
தொலைந்து விட்டாய்,
செக்கு மாடாய்
சிக்கித்தவிக்கிறேன்!
உன்னைப்பற்றிய
நினைவுகளில்
திரும்ப திரும்ப.
காதல்
அசாத்தியமானது தான்!
சுயம்பு
சூன்யமாகிறது,
வடுவும் தடமும்
விலகாது
என் மனச்சுவரில்
அழியாத கோலமாய்..
அசாதாரணமாய்தான்
அமிழ்த்தி வைக்கிறேன்
உன் நினைவுகளை...
தக்கையாகவே
மேலெழும்புகிறாய்
மிகச் சாதாரணமாய்..
யாருமற்ற வேளைதனில்
என் இமைகளின் விரிப்பிலே
எண்ணங்களின் கதவுகள்
திறக்கிறது மூடுகிறது.
தன்னை சுற்றி
நிகழ்ந்துக் கொண்டிருக்கும்
ஏதோவொரு ஓய்வற்றநிலையில்
நான் தொலைந்து போகிறேன்.
என்னை தொட்டுத் தழுவும்
மெல்லியக் காற்று
மென்மைக்குள் என்தேகத்தை
புகுத்திச் செல்கிறது.
ஒரே வினாடியில்
பனிச் சாரலிலும்
கனல் சாரலிலும்
மூழ்கி எழுகிறேன்.
சில கணங்களுக்கு
மழலையில் புகுந்து
இளமையில் நடந்து
முதுமையில் இளைப்பாறுகிறேன்.
எனக்கு தெரியாமலே
என் இதழ்கள் மலர்கிறது
என் கண்ணீர்
ஓடிக்கொண்டிருக்கிறது.
எனது இந்த
தியானமற்ற நிலையில்
துயிலில் பிறக்கா சொப்பனங்கள்
எண்ணற்ற
மனிதா! காயப்படுத்தாதே
உன்மீது
காதல் கொண்ட நெஞ்சத்தை..
நம்பு..
நம்ப வை..
நம்பிக்கையை காப்பாற்று..
நம்பிக்கை இருக்கும் வரைதான்
அது(நம்பிக்கை) குறைந்து கொண்டிருக்கும்..
இல்லாமல் போன பின்பும்
இழக்க நேரிட்டால்
உனைத் தூக்கி எறிந்து விடும்
ஆதலால்
நம்பு..
நம்ப வை..
நம்பிக்கையை காப்பாற்று..
அறிவோம் தமிழன் பெருமை!!!
🙏🙏🙏 இந்த உலகத்தில் உள்ள அணைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி இருக்கும்? இதை கேள்வியை உலகில் உள்ள நவீன விஞ்சானிகளிடமோ அல்லது மருத்துவரிடமோ கேட்டால் இது முட்டாள்தனமான கேள்வி இது சாத்தியமே இல்லை என்பார்கள். ஆனால் இதே கேள்வியை தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம் இதைதான் பல ஆயிரம்வருடம் முன்பே 18 சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர் போகர்க்கு தோன்றிய சிந்தணையில் உதித்த மருந்துதான் நவபாஷாணம். இதற்காக அவர் மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார் கிட்டத்தட்ட 4448 மூலிகைளை உபயோகித்து அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த பாஷாணங்களை 9 பாஷாணங்களாக பிரித்து எடுத்தார் அவை (கௌரிபாஷானம் ,கெந்தகபாஷானம்,சீலைபாஷானம், வீரப்பாஷானம்,கச்சாலபாஷானம், வெள்ளை பாஷானம் தொட்டிபாஷானம்,ச ூதப்பாஷானம்,சங்குபாஷானம் ஆகும்)இந்த 9 பாஷானங்களை 9 விதமான எரிபொருளை கொண்டு சூடு பண்ணி பூமியில் குழிதோண்டி இந்த 9 பாஷாணங்களை புதைத்து குறிப்பிட்ட நாளில் எடுத்து மருந்தாக மக்களுக்கு கொடுத்தார். இந்த நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில் இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்டது பழனி முருகன் சிலை மட்டுமே. இதில் நிறைய சந்தேகங்கள் தோன்றலாம் இதை ஏன் சிலையாக வடித்தார் மருந்தாகவே மக்களுக்கு கொடுத்திருக்கலாமே என்று. இதைபற்றி இன்னொரு தகவல் என்னவேன்றால் நவபாஷானத்தை போகர் கண்டுபிடித்தது மனிதனின் நோயை போக்குவதற்கு இல்லை மனிதனை இறப்பே இல்லாமல் செய்வதற்குதான் கண்டுபிடித்தார் என்று சில சித்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர் கண்டுபிடித்த நவபாஷாணத்தை பற்றி கேள்விபட்ட மற்ற சித்தர்கள் போகரை நீ இயற்கை விதிக்கு எதிராக செயல்படுகிறாய் இந்த நவபாஷானத்தை உடனே அழித்து விடு என்று அறிவுரை கூறினார்கள்.உடனே தன் தவறை உணர்ந்த போகர் அந்த பாஷாணங்களை அழிக்க மணமில்லாமல் அதை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தமுடியாது படி முருகன் சிலையாக செய்து பழனியில் வைத்து விட்டார். இந்த கதையை கேட்டவுடன் சில பேருக்கு சிரிப்பு வரலாம் அது எப்படிங்க மனிதன் இறப்பே இல்லாமல் வாழ முடியும் என்று இதை உங்களுக்கு அறிவியல் பூர்வமாகவே விளக்குகிறேன் அதாவது இப்போம் உள்ள dna(மரபனு) ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு மனிதனின் மரபனுவை சுத்திகரிப்பதன்மூலம் இளமை மாறாமல் 1200 ஆண்டுகள் வாழலாம் என்று கூறுகின்றனர் . அதை போல் இந்த நவபாஷாணம் ஏன் நமது மரபனுவை சுத்திகரித்து இறப்பை தடுக்ககூடாது. ஏது எப்படியோ இந்த நவபாஷானத்தை நமது அரசாங்கம்தான் ஆய்வுக்கு உட்படுத்தி அதோடு உண்மை தன்மையை உலகுக்கு தெரியபடுத்த வேண்டும மக்கள் அனைவரும் சித்தர்களின் இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நோக்கம். கிருஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர் இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார் இவர் பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். இவரைபற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலை படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன் . இப்பேர்பட்ட தமிழனை உலகம்முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறார் இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டுபிடித்துவிட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது. தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்ஞானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே.இப்படி தமிழனின் புகழ் மறந்து தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது 🙏🙏🙏
மார்கழி மாதம்..
பனிவிழும் நேரம்..
சூரியனுக்கும் எழ விருப்பமில்லை
கிழக்கே உறங்குகிறான்
காகம் கரைவதை கேட்டுக்கொண்டே..
நான் மட்டும் எழுந்துவிட்டேன்..
அவளை வரவேற்கும்
வாசல் கோலமாய்
கிடக்கிறேன் நான் எதிர்வீட்டில்..
அன்னமயில் கிண்ணம் ஏந்தி
வண்ணக்கோலம் போட
வாசல் வருவாள் அதற்காக..
சாணம் கரைத்து நீர் தெளித்தாள்
அவள் நினைவை என்னில் விதைத்தது போல..
புள்ளி வைத்து கோடு கிழித்தாள்
மௌனத்தால் என்னை அறுத்தது போல..
வண்ணப்பொடிதனை வகையாய் தூவினாள்
வசந்தம் என்னுள் வீசியது போல..
வாசலில் கிடைத்துவிட்டது
அழகாய் வண்ணக்கோலம் ..
அதில் இணைக்கப்படாத நடு புள்ளியாய்
நான்மட்டும்
அவள் பதிலுக்காக.
ஊனமுற்றவர்க்கு உதவி செய்வதில்லை
பட்டினியில் வாடியோற்கு பசி தீர்க்கவில்லை..
ஏழையின் கல்விக்கு கடுகளவும் செய்யவில்லை..
விதவையின் விருப்பங்கள் மதிப்பதில்லை..
அனாதையின் ஏக்கங்கள் ஏற்பதில்லை..
பெற்றோர்களின் பெருமை அறிவதில்லை..
ஆனால்
தேட மட்டும் செய்கின்றனர்
நம்மில் சிலர்..
தீர்த்தக்கரையின் அருகில்
தான் செய்யாத புண்ணியத்தை..
தேடாத ஓர் இன்பம்
தேவனால் கிடைத்தது..
வளமான வாழ்வு இது
வசந்தமாய் வந்தது..
சம்பிரதாயம் பல இருக்கு
பெரியோர்கள் சொன்னது..
எட்டுத்திக்கும் முரசடிக்க
யாரை நானும் அழைப்பது..
கண்ணனவன் திருவருளால்
மன்னனவன் வந்துவிட்டான்..
மாசில்லா மனம்கொண்டு
மலர்மாலை சூடிவிட்டான்..
மங்கையின் மனதோடு
மாங்கல்யம் ஆட..
வந்தோர்கள் விழி வழியே
வாழ்த்துக்கள் பாட..
தென்னவனின் கைக்குள்
பதுங்கியது
பாவையின் விரல்கள் ஐந்தும்
சாட்சியாம் அக்னியை
சந்தோசத்துடன் வலம் வர..
தேடல்.. தேடல்..
போதும் என ஏற்காத
என் பொருள் தேடல்..
தேடலின் இறுதியில்
தேவையும் தீர்ந்தது
வாழ்நாளும் கழிந்தது
வாழ்வை ருசிக்காமலே..
நண்பர்கள் (55)
![தேவாதேவா](https://eluthu.com/images/userthumbs/f3/whbuz_30130.jpg)
தேவாதேவா
இலங்கை
![சகா சலீம் கான்](https://eluthu.com/images/userthumbs/a/jgpoa_3856.jpg)
சகா சலீம் கான்
சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
![வித்யா](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
வித்யா
சென்னை
![நிஷாந்த்](https://eluthu.com/images/userthumbs/f3/evlgj_35426.jpg)
நிஷாந்த்
வேலூர்
![சொ பாஸ்கரன்](https://eluthu.com/images/userthumbs/f3/evhxi_33067.jpg)