ஒரு தலைக்காதல்

மார்கழி மாதம்..
பனிவிழும் நேரம்..
சூரியனுக்கும் எழ விருப்பமில்லை
கிழக்கே உறங்குகிறான்
காகம் கரைவதை கேட்டுக்கொண்டே..
நான் மட்டும் எழுந்துவிட்டேன்..
அவளை வரவேற்கும்
வாசல் கோலமாய்
கிடக்கிறேன் நான் எதிர்வீட்டில்..
அன்னமயில் கிண்ணம் ஏந்தி
வண்ணக்கோலம் போட
வாசல் வருவாள் அதற்காக..
சாணம் கரைத்து நீர் தெளித்தாள்
அவள் நினைவை என்னில் விதைத்தது போல..
புள்ளி வைத்து கோடு கிழித்தாள்
மௌனத்தால் என்னை அறுத்தது போல..
வண்ணப்பொடிதனை வகையாய் தூவினாள்
வசந்தம் என்னுள் வீசியது போல..
வாசலில் கிடைத்துவிட்டது
அழகாய் வண்ணக்கோலம் ..
அதில் இணைக்கப்படாத நடு புள்ளியாய்
நான்மட்டும்
அவள் பதிலுக்காக...

எழுதியவர் : தீபாகுமரேசன் (19-Dec-15, 12:33 pm)
பார்வை : 200

மேலே