நான் யார்
போகும் போக்கில் போக
எண்ணம் வழிநடத்த
என்னனோமோ செய்யும் மனமே
தேவைக்கு செய்யும் செயலே தெளிவா
விறல் சூப்பினால் பசி தீருமா
மனம் வெண்மையா வெகுளியா
தூண்டலில்லாத கலையா
வண்ணம் தீட்டப்படதா ஓவியமா
சேரும் இடமாறியாத நடையா
அர்த்தமற்ற குரலா சைகையா சிரிப்பா
துணை தேட வாழ்க்கையா
சிந்தனை இல்லையேல் சிலையே
சரியோ தவறோ ஏதோ செய்யலா
என்ன நிகழும் அடுத்த நிமிடம்
வாழ்க்கை என்பது கனவா
கனவெனில்
நான் யார்? எங்கு இருக்கிறேன்
கண்விழித்தால் கனவாகுமா
விழிக்க விட்டால் அது தான் நிஜமா ?

