முதல் காதல்
என் முதல் காதலே
அப்போது நான்
அறிந்திருக்கவில்லை
காதலின் இலக்கணத்தை
உன் உருவம்
கண்களில் விழுந்து
பாம்பின் விஷமென
பரவி இருந்தது
அந்த ஈரெட்டு வயதில்
யாரும் அறியாமல்
உன்னை பார்த்த
தருணங்கள்
நித்தம் நித்தம்
மத்தாப்பு மழை
நீ என்னை
நோக்கிய நிமிடங்கள்
அழகிய தீயின்
தாக்கமாக
நாம் கண்ட நொடிகள்
இதயத்தில்
நிரந்தர வானவில்லாக
என் வசந்தத்தின்
விதையே
காதலின் இலக்கணம்
உணர்வதற்குள்
மாடிதொட்டியில்
ரோஜா பூவாக