திரும்ப விரும்பி அழைப்பாய்
விரும்பியதை விட்டு விலகி போகிறேன் ..
விருப்பம் இல்லாமல்
உன் நினைவுகளிலிருந்து கழண்டு போகிறேன் ..
வெட்டி எறிய முடியாமல்
சொல்ல வந்த வார்த்தைகளை மென்று
தின்று விடுகிறேன் ...
அவைகள் உன்னை காயபடுத்தி விடுமோ என்று
உன்னுடனான என் நெருக்கத்தை நெஞ்சுக்குள்
அடக்கி நண்பனாக நடிக்கிறேன் ...
உன்னுடன் பேசும் தகுதியை இழந்து
விடுவோமோ என்ற பயத்தில்
இதய துடிப்பையும் மறந்து விட்டேன் ...
அதை விட அதிகமாக உன்னை நேசிப்பதால்
இப்போதும் என் கோட்டையை நானே இடித்து செல்கிறேன் ...
இனி மேலும் நடிக்க முடியாது என்பதற்காக
திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போகிறேன் ...
நீ திரும்ப விரும்பி அழைப்பாய் என்ற ஆசையல் ...