திருமணம்

தேடாத ஓர் இன்பம்
தேவனால் கிடைத்தது..
வளமான வாழ்வு இது
வசந்தமாய் வந்தது..
சம்பிரதாயம் பல இருக்கு
பெரியோர்கள் சொன்னது..
எட்டுத்திக்கும் முரசடிக்க
யாரை நானும் அழைப்பது..
கண்ணனவன் திருவருளால்
மன்னனவன் வந்துவிட்டான்..
மாசில்லா மனம்கொண்டு
மலர்மாலை சூடிவிட்டான்..
மங்கையின் மனதோடு
மாங்கல்யம் ஆட..
வந்தோர்கள் விழி வழியே
வாழ்த்துக்கள் பாட..
தென்னவனின் கைக்குள்
பதுங்கியது
பாவையின் விரல்கள் ஐந்தும்
சாட்சியாம் அக்னியை
சந்தோசத்துடன் வலம் வர..