மறக்க முடியவில்லை
நிஜங்களை சேமித்தேன்
நிழற்படங்களாய்;
சம்பாஷனைகளையும்
கணினி பதிவுகளாய்;
என்னைப்பிரிந்து எங்கோ
தொலைந்து விட்டாய்,
செக்கு மாடாய்
சிக்கித்தவிக்கிறேன்!
உன்னைப்பற்றிய
நினைவுகளில்
திரும்ப திரும்ப.
காதல்
அசாத்தியமானது தான்!
சுயம்பு
சூன்யமாகிறது,
வடுவும் தடமும்
விலகாது
என் மனச்சுவரில்
அழியாத கோலமாய்..
அசாதாரணமாய்தான்
அமிழ்த்தி வைக்கிறேன்
உன் நினைவுகளை...
தக்கையாகவே
மேலெழும்புகிறாய்
மிகச் சாதாரணமாய்..