கண்ணீரில் தூதுவிடுகிறேன் உனக்காக 555

உயிரே...
பௌர்ணமி நிலவாக இருந்த என்னை
நீ நேசிக்க தொடங்கினாய்...
என்னை நீ விண்மேகமாய்
மூடிவைத்தாய்...
விண்ணாக நான் இருந்தாலும் நீ
விடிவெள்ளியாக இருப்பேன் என்றாய்...
என்னை மூடிவைத்த நீ
மறந்துவிட்டாய் முழுவதும் என்னை...
இன்று நான் அலைகிறேன்
மழைமேகமாய்...
மழைத்துளிகளோடு கண்ணீர்
துளிகளையும் சேர்த்து...
நீ செல்லும் பூமி எங்கும்
தெளிக்கிறேன்...
உன் பாதம் பட்ட
பாதசுவட்டில்...
என் கண்ணீர்துளிகளாவது
தஞ்சம் அடையட்டும்...
மழைத்துளிகளை
தூதுவிடுகிறேன் உனக்காக கண்ணீரில்.....