புண்ணியம் இருக்குமிடம்

ஊனமுற்றவர்க்கு உதவி செய்வதில்லை
பட்டினியில் வாடியோற்கு பசி தீர்க்கவில்லை..
ஏழையின் கல்விக்கு கடுகளவும் செய்யவில்லை..
விதவையின் விருப்பங்கள் மதிப்பதில்லை..
அனாதையின் ஏக்கங்கள் ஏற்பதில்லை..
பெற்றோர்களின் பெருமை அறிவதில்லை..
ஆனால்
தேட மட்டும் செய்கின்றனர்
நம்மில் சிலர்..
தீர்த்தக்கரையின் அருகில்
தான் செய்யாத புண்ணியத்தை..

எழுதியவர் : தீபாகுமரேசன் (6-Dec-15, 4:51 pm)
பார்வை : 144

மேலே