அந்த வீடு
அந்த வீடு
பளிச்சென்ற சுவர்கள்!
கிறுக்குவதற்கு
குழந்தைகள்
இல்லையாம்!
நட்சத்திர அந்தஸ்தில்..
சமையலறை!
வருவதில்லையாம்
விருந்தினர்கள்!
வண்ண வண்ண பூச்செடிகள்!
வீட்டைச் சுற்றிலும்…..
பூக்காதததது
புன்னகைப் பூக்கள்!
காவலுக்கு….
பொமேரேனியன்கள்!
என்றுமே…
திறக்காத நெடுங்கதவுகள்…
காதில் கேட்டது….
”யாரோ”
வாழ்கிறார்களாம்!
”அந்த வீட்டில்”!
நன்றி- பிரதிலிபி வலைத்தளம் ----கே. அசோகன்.