வாங்கிட வந்திடும் வாழ்வு --- முன்முடுகு வெண்பா

விஞ்சிடு நம்மின மென்பது நம்திரு
வஞ்சியி னன்பினி லுன்னத மெங்கிலு
மோங்கிட வாழ்தலா மோங்கிய நாட்டிற்கு
வாங்கிட வந்திடும் வாழ்வு .


பொருள் :-

விஞ்சிடும் நமது தமிழர் இனம் என்பது நம் தமிழ் மங்கையரின் அன்பினால் விளைந்த உன்னத மெங்கும் ஓங்கிட வாழ்தல் ஆகும் . சிறந்து ஓங்கிய நாட்டிற்கு வாங்கிட வேண்டியது இதுதான் . இதனால் நமக்கு நல்வாழ்வு வந்திடும் என்பதே உறுதி .


தந்தன --- சந்தம் . ( முதல் இரண்டு அடிகளுக்கு மட்டும் )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Dec-15, 5:36 pm)
பார்வை : 53

மேலே