என் புத்தன்

வண்ணங்களற்ற
தேவதைகள்
நீருக்குள்
நிறம் கோர்க்கிறார்கள்...
நிறங்களின் உதிரிகளாக,
சிறுவர்கள்
நீருக்குள்
நாய் சுமக்கிறார்கள்....
புத்தகம் வழியாக
ஆள விரும்புகிறவன்
நீருக்குள்
மாலை செய்கிறான்....
பகலும் இரவும்
ஒன்றென்ற
நீருக்குள்
பாம்புகளும்... மிதக்கின்றன
இடம் பிடிக்க முடியாமல்
கலங்கி நிற்கும்
கிழவிக்கு-இடம் தந்த
தொழு நோய்க்காரன் ஒதுங்கி
படுத்துக் கொள்கிறான்...
பிச்சை புகினும்
வாழ்க்கை தேடும் கண்ணில்லாதவன்
இன்னொரு கண்ணில்லா
காலுமில்லாதவனிடமிருந்து
நீரைத் தள்ளுகிறான்...
குடித்து செத்தவன் வீட்டு
கடைக் குட்டியும்
ஓடி ஓடி சோறு போடுகிறது..
முக நூல் வெட்டிக்கு மட்டுமல்ல
மார்க்குகே
புரிய செய்தவன்
மதங்களற்றவன்
மற்றும்... சாதி அழித்தவன்...
என் நகர்வலத்தில்
மெல்ல கலைகிறது
என் புத்தன் வேஷம்...
கவிஜி